No icon

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயார்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் தொடர்ந்து பெய்து வரும் பெருமழையால் 29 மாவட்டங்களின் 2800 கிராமங்களில் 16 இலட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில், அவர்களிடையே தன் பணிகளைத் துவக்கத் தயாராக உள்ளது இந்தியக் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு. களத்தில் இறங்கி மக்களுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் ஆற்ற இந்திய காரித்தாஸ் அமைப்பு தயாராக இருப்பதாகவும், அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கும் இவ்வேளையில், தங்களின் அரசு சாரா அமைப்புகளின் உதவியுடன் நிலைமையை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். அரசு அமைப்புகள் மீட்புப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு, முகாம்களை அமைத்து வருவதாகவும் தன் பாராட்டுகளை வெளியிட்ட இந்திய காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி லாக்ரா அவர்கள், இதுவரை அரசால் 181 முகாம்களும், 334 நிவாரணப் பொருள் விநியோக மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Comment