No icon

​​​​​​​பொங்கிய இராகுல்! பதுங்கிய மோடி!

அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தியின் அனல் பறக்கும் பாராளுமன்றப் பேச்சைக் கண்டு ஒட்டுமொத்தப் பாராளுமன்றமே அதிர்ச்சியுற்றது.

கடந்த பாராளுமன்றத்திற்கு நடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. இராகுல் காந்தியைபப்புமற்றும் பல பெயர்களில் பா... தலைவர்கள் இகழ்ந்தார்கள். அவரதுபாரத ஜோடோபாதயாத்திரை இந்திய மக்களின் ஆதரவையும், பாராட்டையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.

இராகுல் காந்தி மக்களின் கருத்துகளை உணர்ச்சிப்பூர்வமாக முன்வைத்தார். இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கும் நிலைகளைப் பற்றிக் கேள்விகளைத் தொடுத்தார். இதனால் பா... தலைவர்கள் பதற்றம் அடைந்தனர்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இராகுல், சிவபெருமான் படத்தைக் காட்டிப் பேச்சைத் தொடங்கியபோது சிவபெருமானின் படத்தைக் காட்டுவதற்குக் காரணம் சிவனின் கழுத்தில் உள்ள பாம்பு உண்மையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது என்றார். எதிர்க்கட்சியாக இருப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் உள்ளன. அதிகாரத்தைவிட உண்மைதான் வலிமை வாய்ந்தது என்றார். இந்து மதம் மட்டுமல்லாமல் இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், சீக்கியம், சமணம் உள்ளிட்ட அனைத்து மதங்களும் அமைதியையும், அன்பையும் போதிக்கின்றன; ஆனால், தங்களை இந்துகள் என்று கூறிக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு, பொய் ஆகியவை மட்டுமே பேசுகின்றனர். உண்மைக்குத் துணை நிற்க வேண்டும் என இந்து மதம் சொல்கிறது. பா...வினர் மட்டுமே இந்துகள் இல்லை; பா... ஒட்டுமொத்த இந்துகளின் தலைவர்களும் இல்லை. இந்து மக்கள் அமைதியை விரும்புகின்றனர். வன்முறையைக் கையில் எடுக்கும் பா...வை அயோத்தியிலேயே மக்கள் தோற்கடித்துள்ளார்கள். பா...விற்கு நல்ல பாடத்தை அம்மக்களே கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பிரதமர் மோடியும், ஆர்.எஸ்.எஸ்.-சும், பா...வும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துகள் சமுதாயம் கிடையாது என்று தெளிவாக இராகுல் எடுத்துரைத்தார்.

நீட்தேர்வு என்பது தொழில் முறை தேர்வு அல்ல; பணக்காரர்களுக்காக உருவாக்கப்பட்ட வியாபாரத் தேர்வு. கடந்த ஏழு ஆண்டுகளில் 70 இடங்களில் வினாத்தாள்கள் கசிவு நடந்துள்ளன. கோடிக்கணக்கில் அந்தத் தேர்வில் ஊழல் நடந்துள்ளன. தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு நடத்தும் அமைப்பு (NTA) மட்டும் 500 கோடி அளவில் தேர்வுக் கட்டணமாகப் பெறுகிறது. நீட் தேர்வுக்கு மாணவர்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சி மையங்கள் ஓர் இலட்சம் கோடிக்கு மேல் வருமானத்தைப் பெறுகின்றன. ஆகவே, நீட் தேர்வு பணக்காரர்களுக்கான தேர்வு. மாணவர்களின் மீது அக்கறை இல்லாத பா... அரசு, இது குறித்து அவையில் விவாதிக்க அனுமதிப்பதில்லை.

இராணுவ வீரர்கள் இராணுவத்திற்கு வீரர்களை உருவாக்கும்அக்னிபாத்திட்டம் மோடியின் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் இராணுவ வீரர்கள்யூஸ் அண்ட் த்ரோஎன்ற பாணியில் தூக்கி எறியப் படுகிறார்கள். அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது, இழப்பீடு கிடையாது, தியாகி அந்தஸ்து கிடையாது. இது இராணுவ வீரர்களிடையே பிளவை உருவாக்குகிறது. ‘தேசபக்தர்கள்எனக் கூறிக் கொள்ளும் பா... இவ்விதமாகத் தேசத்திற்கு எதிரான செயலைச் செய்கிறது என்றார் இராகுல்.

விவசாயிகளைப்பயங்கரவாதிகள்என அழைக்கும் அளவுக்கு இந்த அரசுக்குத் திமிர் பிடித்திருக்கிறது. வீரமரணம் அடைந்த விவசாயிகளுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்த விரும்பினோம். பா... அதை அனுமதிக்கவில்லை. மணிப்பூர் நமது தேசத்தின் ஒரு பகுதி என அரசு கருதவில்லை. பா...வின் அரசியலும், கொள்கைகளும் மணிப்பூரைத் தீயில் தள்ளி விட்டன என்று இராகுல் கர்ஜனை செய்து ஆவேசமாகப் பேசினார். இராகுல் காந்தியின் ஒவ்வொரு வார்த்தையும் எதிர்க்கட்சித் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டியது.

இராகுல் பேசும்போது பிரதமர் மோடி குறுக்கிட்டார். அடிக்கடி தண்ணீர் குடித்தார். தனது இருக்கையில் இருந்து எழுந்துஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் வன்முறையாளர்கள் என்று இராகுல் சொல்வது தவறானது; அதை ஏற்றுக் கொள்ள முடியாதுஎன்று ஆவேசப்பட்டார். அதற்கு இராகுல் காந்தி, “பா..., R.S.S. அமைப்புகளை மட்டுமே நான் வன்முறையாளர்கள் என்று சொன்னேன். இந்தியாவில் உள்ள இந்து மக்கள், சிறுபான்மையினர் அமைதியிலும், அன்பிலும் வாழ விரும்புகிறார்கள்என்று பதிலடி கொடுத்தார்.

இப்படி இராகுல் காந்தியின் அனல் பறக்கும் பேச்சின்போது மோடி இரண்டு முறை, அமித்ஷா நான்கு முறை, கிரண் ரிஜ்சு மற்றும் அனுராக் தாக்கூர் ஆறுமுறை, ராஜ்நாத்சிங் மூன்று முறை என அமைச்சர்கள் பலரும் 50-க்கும் மேற்பட்ட குறுக்கீடுகளைப் பதற்றத்தில் செய்தார்கள். அதற்கெல்லாம் துணிவோடு இராகுல் காந்தி பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் மறுநாள் தனது பதில் உரையில் பேசிய பிரதமர் மோடிஇந்தச் சபையில் சபாநாயகர் எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறார். ஏதாவது அவர் செய்ய வேண்டும். சிறுபிள்ளைத்தனமான இராகுலுக்குக் கடவுள் நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார். மோடி தொடர்ந்து இராகுல் குடும்பத்தை இழிவாகப் பேசினார். அவரது பேச்சின் போதுஇந்தியாகூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள்கொல்லாதே, கொல்லாதே! சனநாயகத்தைக் கொல்லாதே. மணிப்பூர் மக்களுக்கு நீதி வேண்டும்என்றெல்லாம் தொடர்ந்து குரல் எழுப்பினர்.

கடந்த ஆண்டுகளில் கேள்வி கேட்க யாரையும் அனுமதிக்கவில்லை. கேள்வி கேட்டவர்களையும் ஒதுக்கினார்கள். முதன்முறையாகஇந்தியாகூட்டணி சார்பில் ஆவேசமாகப் பேசிய இராகுல் காந்தியின் பேச்சில் பதற்றம் அடைந்து, கலக்கத்தோடு எழுந்து பலமுறை பா... தலைவர்கள் பேசினார்கள். முதல் கூட்டத் தொடரிலேயே இப்படிப் பயத்தையும், பதற்றத்தையும் மோடி அரசுக்குஇந்தியாகூட்டணி காட்டி இருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அந்தப் பயம் இருக்கவே செய்யும்!

இராகுல் காந்தியைப் போலவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மகுவா மொயித்திராவும் பேசினார். “மணிப்பூருக்கு ஒருமுறை கூட பிரதமர் மோடி போகவில்லை. பதினெட்டாவது பாராளுமன்ற முதல் உரையிலும் கூட பிரதமர் மோடி மணிப்பூரைப் பற்றிப் பேசவே இல்லை. பா...வில் பெண் எம்.பி.க்கள் 13 பேர் மட்டுமே உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் பா...விற்கு விசுவாசத்தோடு நடந்துகொண்டது. இரயில் விபத்துகள் தொடர்கின்றன. விமான நிலையங்கள் இடிந்து விழுகின்றனபோன்ற சம்பவங்களைப் பற்றிக் காரசாரமாக அவர் உரக்கப் பேசும்போது மோடி பாராளுமன்றத்தை விட்டு வெளியில் நடந்து கொண்டிருந்தார். அப்போது மகுவா மொயித்திரா மோடியைப் பார்த்துஹலோ பிரைம் மினிஸ்டர், போகாதீங்க! என் பேச்சைக் கேளுங்கஎன்று அழைத்தார். அதைத் தொடர்ந்து தி.மு.. எம்.பி. . ராசாவும் பா...வின் மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நேரிடையாக விமர்சனம் செய்தார்.

பாராளுமன்றத்தில் நடந்த இந்த நிகழ்வுகள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளன. பா...வினர் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினார்கள். இது பா...வின் பலவீனத்தைக் காட்டுகிறது. தங்களிடம் மெஜாரிட்டி இல்லாமல், கூட்டணி அரசாக இருப்பதால் திடமுடன் நினைத்ததை எல்லாம் மோடி அரசு செய்ய இயலாது என்பதைக் காட்டுகிறது.

எதிர்க்கட்சிகளும் மிக விழிப்போடு செயல்படுகின்றன. மக்கள் நலம் சார்ந்த கருத்துகளையும், திட்டங்களையும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் துணிவுடன் எடுத்துரைப்பது மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கின்றன. சனநாயகம், சமதர்மம், சமயச் சார்பற்றதன்மை போன்றவை மக்களாட்சி காக்கப்படும் என்பதை உறுதி செய்கின்றன.

Comment