No icon

வாழ்வைத் தேர்ந்து கொள்வோம் பேரணி!

கருவில் உருவானது முதல் இயற்கை மரணம் வரை உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன்வாழ்வைத் தேர்ந்து கொள்வோம்என்ற தலைப்பில் ஜூன் 22 அன்று உரோம் நகரில் பேரணியானது நடத்தப்பட்டது. மனித வாழ்வைப் பாதுகாப்பதில் எவ்வித விட்டுக்கொடுத்தலும் இடம்பெறக் கூடாது எனவும், எவ்வித எதிர்ப்பு வந்தாலும் மனித மாண்பைக் காப்பதில் துணிவுடன் செயல்பட வேண்டும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வாழ்வை வரவேற்கும் குடும்பத்தின் அழகிற்குச் சான்று பகர்பவர்களாக, போர், அடிமைத்தனம் மற்றும் மக்களை வியாபாரப் பொருள்களாகக் கடத்தும் நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நினைவில் கொண்டவர்களாக, கருவில் வளரும் குழந்தை முதல் துயருறும் முதியோர் வரை பலவீனமானவர்களைப் பயனற்றது எனத் தூக்கியெறியும் மனநிலையை வெறுத்து ஒதுக்குவோம் எனவும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தூக்கியெறியும் கலாச்சாரத்திற்கு எதிராக வாழ்வின் மேன்மையை உணர்த்தும் வகையில் நடத்தப்படும் இந்தப் பேரணியில், கருக்கலைத்தல், கருணைக்கொலை, தற்கொலைக்கு உதவுதல், ஆதாயத்திற்காகக் கருவில் சோதனை முயற்சிகள் போன்றவைகளுக்கான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.

Comment