No icon

கடல் ஞாயிறு!

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று திரு அவையால்கடல் ஞாயிறுசிறப்பிக்கப்படுகின்றது. கடற்பணியாளர்கள் கடலின் எல்லையற்ற அழகை அனுபவிப்பது மட்டுமல்லாமல், தங்கள் உடல், ஆன்மிகம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளையும் அனுபவிக்கிறார்கள். அநீதிகள், சுரண்டல்கள் மற்றும் சமத்துவமின்மை போன்றவற்றைக் கடற்பணியாளர்கள் அவர்களுடைய பணிகளில் எதிர்கொள்வதாகவும், பல இலட்சம் மக்கள் பணியாற்றும் இத்துறையில் அவர்களுடைய மறைமுகப் பணிகள் மூலம் நம் அன்றாட தேவைக்கான பொருள்கள் நம்மை வந்தடைகின்றன எனவும் திரு அவை வரலாற்றில் கடலோடு தொடர்புடைய இரு நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ள கர்தினால் அவர்கள், திருத்தூதர் புனித பவுலடியாரின் நற்செய்திப் பணியானது கடல் பயணத்தைச் சார்ந்து அமைந்திருந்ததாகவும்  குறிப்பிட்டார். இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவம் பரவ மிகப்பெரும் வழிமுறையாகக் கடல் அமைந்திருந்ததை நினைவு கூர்ந்தார்.

Comment