No icon

காற்று மாசுகேட்டினைத் தடுத்திடுக…

மார்ச் 4, 2019 அன்று ஐ.நா. மனித உரிமைகள் அவையின் நாற்பதாவது பொது அமர்வில் பாதுகாப்பான, தூய,
நலமிக்க வாழ்வை அனுபவித் தல் மற்றும் சுற்றுச்சூழல் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் இவான் யுர்கோவிச், காற்று மாசுகேடும், காலநிலை மாற்றமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண் டிருக்கின்றன என்றார்.
வீட்டிற்குள்ளும், வெளியேயும் காணப் படும் காற்று மாசுகேடு ஒவ்வோர் ஆண்டும் ஆறு
இலட்சம் சிறார் உட்பட எழுபது இலட்சம் பேர்
இறப்பிற்குக் காரணமாகின்றது. இது எல்லா மனிதர்
களையும் பாதித்தாலும், ஏழைகளும், ஏழை
சமுதாயங்களுமே அதிகம் இழப்பைச் சந்திக்கின் றன. காற்று மாசுகேடு ஒரு தடுக்கக்கூடிய பிரச்சினையாக இருந்தாலும், இதனைத் தடுப்பதற்கு அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சி அவசியமாகின்றது. நம் பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாப்பதற்கு திருப்பீடம் எப்போதுமே ஒன்று சேர்ந்து உழைக்கும் என்றார். புதுப்பிக்கின்ற எரிசக்தியைப் பயன்படுத்துவதன் வழியாக இந்த நூற்றாண்டிற்குள் 15 கோடிப் பேரின் வாழ்வைக் காப்பாற்ற முடியும். ஏனெனில் ஆண்களைவிட பெண்களை அதிகமாகப் பாதிக்கின்ற காற்று மாசுகேடு, சப்தமின்றி கொலை செய்கின்றது என்றார். புற்று நோய், சுவாசம் சார்ந்த நோய், இதய நோய்களால் பல ஆண்டுகள் துன்புற்ற பின்பு ஒவ்வொரு மணிக்கும் 800 பேர் இறக்கின்றனர்.

Comment