மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிறித்தவர்களின் கோரிக்கைகள்
- Author தமிழக ஆயர் பேரவை --
- Thursday, 20 Jun, 2019
கிறித்தவ சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட மாநாடு ஆயர்கள் தலைமையில் மதுரையில் நடைபெற்றது. அதில், ஏழை-எளிய மக்களின் நலன் கருதியும், தேசத்தின் எதிர்
காலம் கருதியும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்யப்
பட்டது. மேலும், இந்நிலைப் பாட்டை மக்களிடம் கொண்டு செல்ல, களப்பணியாற்ற வேண் டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
இச்சூழலில், கிறித்தவ
சமூகத்தின் கோரிக்கைகளை மதச்
சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
யின் கவனத்திற்கு முன்வைக் கிறோம்.
கிறித்தவர்களின் கோரிக்கைகள்
1. பட்டியல் சாதியினருக்கும் பழங்குடியினருக்கும் அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள், மதம் மாறிய சீக்கியர்களுக்கும், பௌத்தர் களுக்கும் தரப்படுகின்றன. இவ்வுரிமைகள் மதம் மாறிய
கிறித்தவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் மறுக்கப்படுகின்றன. கிறித்தவ, இசுலாமிய தலித்து களுக்குச் சமநீதி வழங்க வேண்டுமெனில், 1950 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆணை, பிரிவு 3இல் திருத்தம் கொணர
வேண்டும். இதனை இரங்க
நாத் மிஸ்ரா ஆணையமும், தேசிய சிறுபான்மை ஆணைய மும் வலியுறுத்தியுள்ளன. இத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாநிலக் கட்சிகள் இது தொடர்பாக மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத் தம் தரவேண்டும்.
2. தமிழகத்தில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டு உரிமைகள், மதத்தின் பெயரால் கிறித்தவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. சமூகநீதிக்கு எதிரான இம்முரண்பாடு களையப்பட வேண்டும் எனும் கோரிக்கை கிறித்தவர்கள் சார்பாக முன்வைக்கப்பட்டு வருகிறது. கிறித்தவர்களுக்கு இணையான அந்தந்த இந்து சமூகங்களின் பிரிவுகளில் (பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) கிறித்தவர்களையும் வகைப்படுத்தி, அவர்களுக்கான இடஒதுக் கீட்டை உறுதிசெய்ய வேண்டும். மாநில அரசு உடனடியாக இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
3. கல்வி பெறும் உரிமை குழந்தைகளின் அடிப்படைஉரிமை, ஆனால் அரசுக் கல்வி நிறுவனங்களுக்கு நிகரான நிதியையும், உரிமைகளையும் தமிழக அரசு சிறுபான்மையினர் நடத்தும் தமிழ்வழிக் கல்வி நிறுவனங்களுக்கும் அறிவியல்-கலைக் கல்லூரிகளுக்கும் பல வழிகளில் மறுத்து வருகிறது. மேலும், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் தனித்தன்மையை மதிக்காமல், அவற்றைச் சட்டங்களாலும், அரசாணைகளாலும் மத்திய அரசும் சிதைக்க முயல்கிறது. சிறுபான்மைக் கல்வி நிறுவனங்;களுக்கு எதிரான இத்தகைய போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். 1991-க்குப் பிறகு தொடங்கப்பட்ட பள்ளிகள், வகுப்புகளுக்கு மாநில அரசு மானியம் வழங்க வேண்டும். 2018-இல் சட்டசபையில் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள, தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்காற்றுச் சட்டம், 2018, இந்திய அரசமைப்புச் சட்டத்தாலும், உச்சநீதிமன்றத்தாலும் உறுதிசெய்யப்பட்ட சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கான உரிமைகளை மீறாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி மட்டுமே என்ற நிலை உருவாகவும், எல்லா வகுப்புகளிலும் தமிழ்வழிக் கல்விக்குக் கூடுதல் கவனம் செலுத்தவும் அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
4. மாபெரும் பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையம் (துறைமுகம்) எனும் அழிப்புத் திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தையும், விவசாயிகளையும், மீனவர்களையும் பாதிக்கும். கடலும், மலைகளும், நிலங்களும் அழியும். எனவே இந்த மாவட்டத்தில் புதிய சரக்குப் பெட்டக மாற்று முனையமோ, மாபெரும் துறைமுகமோ தேவையில்லை. தூத்துக்குடியில் துறைமுகம் அபிவிருத்தி செய்ய ரூ.25,000/- கோடியில் வேலை தொடங்கப்பட்டுள்ளது. விழிஞ்ஞத்தில் ரூ.10,000/- கோடியில் துறைமுகம் வேலை நடக்கிறது. எனவே இடைப்பட்ட கோவலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய துறைமுகம் ஒன்று அமைவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
5. தூத்துக்குடியில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும். இப்போராட்டத்தின்போது நடைபெற்ற
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர் களுக்கும் அரசின் முழுமையான நிவாரணம் கிடைக்க வேண்டும்.
6. விவசாயிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், சிறு-குறு வணிகர்கள் போன்ற ஏழை-எளியோரின் நலனை முன்வைத்து, பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் கேடான தொழிற்சாலைகள், இணையம், துறைமுகம் போன்ற திட்டங்களைக் கைவிடவேண்டும்.
7. நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்பு களுக்கான வேட்பாளர் தேர்வில், கிறித்தவர், முஸ்லீம் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக கிறித்தவர்களில் 75
விழுக்காடு கத்தோலிக்கக் கிறித்தவர்கள். தொடர்ந்து மதச்சார்பற்ற கூட்டணிக்கு வாக்களிப்பவர்கள். இவர்களில் ஒருவருக்குக்கூட மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிட தற்போது வாய்ப்புக் கொடுக்
காதது துரதிஷ்டவசமானது. வரும்காலங்களில் கத்தோலிக்கக் கிறித்தவர்களுக்கு பாராளுமன்றத்தில் வாய்ப்பு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
8. தமிழகத்தில் சிறுபான்மையினருக்குத் தனி அமைச்சகம் அமைத்திட வேண்டும்.
9. மதுரை யானைக்கல் காந்திசிலை அருகில் உள்ள பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்களது திருஉருவச் சிலைக்கு அரசு மரியாதை வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும்.
Comment