No icon

திரும்பப்பெற வேண்டிய புதிய தேசிய கல்விக்கொள்கை

மத்திய அரசு வெளியிட்டுள்ள ‘புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை’ தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தை ஜூன் 12 ஆம் நாள் சென்னை காயிதே மில்லத் பன்னாட்டு ஊடகக் கல்வி நிறுவனத்தில் வைத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் முனைவர் வே. வசந்தி தேவி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராசிரியர் அருணன், பேராசிரியர் ச. மாடசாமி, முனைவர் தாவூத் மியாகான், ‘தமிழ் மையம்’ ஜெகத் கஸ்பர், ‘புதிய குரல்’ ஓவியா, முனைவர் அருணா ரத்னம், மருத்துவர் அநு ரத்னா, ஆசிரியர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி, வரலாற்றாசிரியர் கருணானந்தம், பேராசிரியர் ஹாஜா கனி, பேராசிரியர் சிவக்குமார், பட்டதாரி ஆசிரியர் சங்க பூபாலன், மொழிபெயர்ப்பாளர் விழியன், பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன், பேராசிரியர் ‘மூட்டா’கே. ராஜூ, மருத்துவர் ரெக்ஸ் சற்குணம், மருத்துவர் ரவீந்திரநாத், ஆசிரியர் உமா மகேஸ்வரி, மாணவர் சங்க நிரூபன், பெற்றோர் ஆசிரியர் மாணவர் கூட்டமைப்பின் அருமைநாதன், தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, செயற்குழு உறுப்பினர் ஆசிரியர் நா.முத்துநிலவன் ஆகியோர் கலந்து கொண்டு கலந்துரையாடினர்.
இந்த நிகழ்வை அ. குமரேசன் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட முக்கியக் கருத்துகளை மாநிலத் தலைவர் சு. வெங்கடேசன் எம்.பி. ஊடகங்களுக்குத் தெரிவித்தார். நிகழ்வில் ஆலோசிக்கப்பட்ட முக்கியக் கருத்துகள்.
1.     தேசிய கல்விக்கொள்கை என ஒன்று தேவை யில்லை. பன்முகப் பண்பாடுகளும் சமூகங்களும் உள்ள நாட்டில் கல்விக் கொள்கை அந்தந்த மாநிலத்தின் பொறுப்பாகவே இருக்க வேண்டும்.
2.     ஏற்கெனவே மாநில அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வி, அவசரநிலை ஆட்சியின்போது பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தப் புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கை கல்வியை முற்றிலுமாக மத்திய அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு செல்ல வழி செய்கிறது.
3.    பள்ளி வளாகங்களுக்குள் கற்பித்தல் உள்ளிட்ட பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப் படுவார்கள் என்று வரைவறிக்கை கூறுகிறது. கல்வித்துறையோ, பள்ளியோ சாராத தனிப்பட்ட வெளியாட்களும் அமைப்புகளும் நுழைவதற்குக் கதவு திறக்கப்படுகிறது.
4. கல்வியில் தனியார் மயமாக்கல் என்பதை முறைப் படுத்துவதாகவே வரைவறிக்கை உள்ளது.
5. தனியார் கல்வி இருக்கலாம். ஆனால் அவை முற்றிலுமாக மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி வழங்க வேண்டும். அத்தகைய கொள்கை இதில் இல்லை.
6. நிதி ஒதுக்கீடு போன்றவற்றில் மிகத் தந்திரமான ஏற்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்தியா வின் அனைத்து மொழிகளிலும் வரைவறிக்கை வெளியாகுமானால் அந்தத் தந்திரம் வெளிப்படும்.
7.     சீரான (ருniஎநசளயட) கல்வி என்று போட்டுவிட்டு சமமான நியாயமான (நுளூரவையடெந) கல்வி ஏற்பாடு அந்தரத்தில் விடப்பட்டுள்ளது.
8.     பள்ளி வளாகக் கல்வி (ளுஉhடிடிட உடிஅயீடநஒ நுனரஉயவiடிn) என்ற ஏற்பாடு இதில் கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரு பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பார் களானால் அவர்களுக்கான பள்ளி மூடப் பட்டு, தொலைவில் உள்ள மற்றொரு பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். அருகமைப்
பள்ளி என்ற கோட்பாடு நொறுக்கப்படுகிறது.
9.    வரைவறிக்கையின் முன்னுரையே சர்வாதி காரத்தைப் பிரதிபலிக்கிறது. பிரதமரின் நேரடி அதிகாரத்தின் கீழ் நாடு முழுவதும் கல்வித்துறை இயங்கும். ஒட்டுமொத்த எதிர்காலத் தலைமுறையினரின் கல்வியை ஒற்றை அதிகார அமைப்பின் கீழ் கொண்டு வருகிற ஏற்பாடே இது.
10.     இந்தியாவின் வளமான பாரம்பரிய மாண்பு கள் புகட்டப்படும் என்று வரைவறிக்கை கூறுகிறது. இது மறைமுகமாக இந்துத்துவா கோட்பாடுகளைப் புகுத்துகிற ஏற்பாடே யாகும்.
11.    கணிதத்தில் கூட சமஸ்கிருத ஸ்லோகங் கள் இடம்பெற வேண்டும் என சொல்லப்
பட்டுள்ளது. பாஸ்கரா எழுதியிருப்பவை போன்ற கணிதக் குறிப்புகளின் பெயரால் சமஸ்கிருதமயமாக்கல் புகுத்தப் படுகிறது.
12. ஆர்வலர்கள் என்ற ஏற்பாட்டின் மூலம் ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் ஊடுருவுவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.
13.    பரிந்துரைக்கப்பட்டு, எதிர்ப்புக்குப் பின் விலக்கப்பட்டுள்ள மும்மொழித் திட்டம் என்பது இந்தித் திணிப்புக்கான மோசடித் திட்டமே.
14.     வழக்கமான இளங்கலை பட்டப்படிப்புக்குக் கூட பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதற்கான தேசிய தேர்வு முகமை 2020 ஆம் ஆண்டிலிருந்தே செயல்படத் தொடங்கும்.
15.    இந்தியாவின் கல்வியை தில்லி முடிவு செய்யும்.
16.     இது மத்திய அதிகாரமயமாக்கல் கூட அல்ல.
முழுமையான ஒற்றை ஆட்சி மயமாக்கலே.
17.     கல்வி கார்ப்பரேட் மயமாக்கப்படுகிறது.
18.    முறைப்படுத்தும் ஏற்பாடுகள் என்ற பெயரில் நிறையக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுகின்றன. மத்திய அதிகாரக் குவிப்புடன் அதிகார வர்க்கத்தின் பிடியில் கல்வி தள்ளப்படுகிறது.
19.    அதிகாரங்கள் அனைத்தும் மத்திய ஆட்சியிடம், பொறுப்புகள் மாநில ஆட்சியிடம்.
20.    இந்திய பாரம்பரிய மாண்புகளில் ஒன்றாக நிஷ்காம் கர்மா என்று சொல்லப்பட்டுள்ளது. இது உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்துவதாகும்.
21.    கல்லூரிகளை பல்கலைக் கழகங்களிலிருந்து விலக்கும் ஏற்பாடு இதில் உள்ளது. வட இந்தியர்களே ஆசிரியர்களாக இருக்கும் நிலை ஏற்படும்.
22.    அமெரிக்காவின் ஈட்டேன் அமைப்புடன் இணைந்து, ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் கல்வி வணிகத்தில் ஈடுபடுவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.
23.    இந்தியாவை இந்து நாடாக மாற்றும் திட்டத்துடன் இணைந்தது இது.
24.    அறிவியலைப் புனைவுகளோடு இணைக்கிற சூழ்ச்சி இருக்கிறது.
25.    பெற்றோருக்கு மேலும் நிதிச் சுமையையும், மாணவர்களுக்கு வேலைச்சுமையையும் ஏற்றுவதே இந்தக் கொள்கை.
26.    காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது, புதிய ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு மாறாக, தேர்ச்சி அடையாத மாணவர்களுக்குப் பழைய மாணவர்களைக் கொண்டு பயிற்றுவிக்கிற நடைமுறை கொண்டு வரப்படுகிறது. இது ஆர்எஸ்எஸ் ஆட்கள் உள்ளே நுழைவதை சட்டப்பூர்வமாக்குகின்ற உத்தி.
27.    கற்பித்தல் என்பதையே ஒழித்துக் கட்ட வழி செய்யும் அடினரடயச யயீயீசடியஉh என்ற ஒரு புதிய நடைமுறை இதில் புகுத்தப்படுகிறது.
28.    பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இந்தி தெரிந்திருப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
29.    பண்பாடு, கார்ப்பரேட் மயம், மொழி ஆதிக்கம் என்ற மூன்று திணிப்புகளுக்கு இட்டுச் செல்கிறது.
30.    அரசமைப்புச் சாசனத்தை மாற்றாமலே கல்விக் கொள்கையின் மூலம் இந்து நாடு என மாற்றும் முயற்சியே இது.
31.    சமஸ்கிருதம் அனைத்து மக்களையும் இணைக்கிறது எனப் புகுத்தப் பட்டுள்ளது. கல்விக் கொள்கையின் அறிமுகத்திலேயே வேதகால மாண்புகள் என்பதாகச் சொல்லப்படுகிறது.
32.    கல்வி வளாகத்தில் மாணவர்களின் ஜன நாயக உரிமைகள் பற்றி இக்கொள்கையில் எதுவும் இல்லை. மாணவர் வாழ்வை பாதிப்பதாக இருக்கிறது.
33.    அரசமைப்புச் சாசனத்தில் எந்தச் சட்ட உரையோடும் இந்தக் கொள்கை பொருந்தவில்லை.
34.    பனிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்குச் செல்வது என்பதற்கு மாறாக, எப்போது வேண்டுமானாலும் நுழைவுத் தேர்வு நடத்த வழி செய்யப்படுகிறது.
35.    மத்திய வாரியத்தின் அங்கீகாரம் என்ற
ஏற்பாடு, அதிபர் முறையை நோக்கி நகர்த்துவதற்கான ஒரு நடைமுறை யாகவே இருக்கிறது.
36.    உலக வர்த்தக நிறுவனம் கூறுகிற தனியார் - அரசு சமநிலை என்பதற்கு இதில் வழி செய்யப்பட்டுள்ளது.
37.    தலித் மக்கள் மேம்பாடு என்ற கண்ணோட்டத்திற்கு எதிரானதாக இருக்கிறது.
38.    உள்ளூர் தலைமையாசிரியர் பணிக்குக் கூட தேசிய நுழைவுத்தேர்வு கொண்டு வரப்படுகிறது.
39.    தகுதி பற்றி மட்டுமே பேசுகிற இந்தக் கொள்கை சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஆகியவை பற்றி மௌனம் சாதிக்கிறது. சமூக நீதிக்கான பள்ளிகள் என்ற கொள்கையே நிர்மூலமாக்கப்படுகிறது.
40. கல்லூரிகள் நான்கு தர நிலைகளாகப் பிரிக்கப்படுகின்றன. கல்லூரிகளை வெறும் தொழில் பயிற்சிக் கூடங்களாக மாற்றுகிற ஏற்பாடே இது.
41.    எல்லாப் பணிகளுக்கும் வெளியாட்கள் ஒப்பந்தம் (டிரவளடிரசஉiபே) கொண்டு வரப்படுகிறது.
42. ’நுஒவை நுஒயஅ’ என்பது உள்ளிட்டட அனைத்துத் தேர்வு முறைகளும் மாணவர்
களை வடிகட்டும் ஏற்பாடு களாகவே உள்ளன.
43. மூன்றாவது மொழி ஒன்றைப் படிக்கிற நேரத்தில் குழந்தைகள் கணிதம், அறிவியல் என ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்துப் படிக்க முடியும். அவர்களை ஏன் மூன்றாவது மொழி படி என்று கட்டாயப்படுத்த வேண்டும்?
44.    மீண்டும் மநுதர்மம் என்பதே புதிய கல்விக் கொள்கை.
45.    முன்பு சமஸ்கிருதம் கேட்கிற மற்றவர்களின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றார்கள். இப்போது சமஸ்கிருதம் படி என்கிறார்கள். வழி முறைகளை இப்படி மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
46.    வேத காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது. வைஃபை இருந்தது என்பன போன்ற அபத்தங்களுக்கு அறிவியல் முலாம் பூசுகிற வேலைதான் இந்தக் கொள்கையில் முன்மொழியப்பட்டிருக்கிறது.
47.    கல்விக் கொள்கை வரைவின் ஆங்கில ஆவணத்தில், பள்ளிக் கல்வியின் மூலம் சேவா, அகிம்சா, ஸ்வாச்சதா, சத்யா, நிஷ்காம் கர்மா ஆகிய இந்திய மாண்புகள் வளர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆங்கில ஆவணத்தில் எதற்காகச் சமஸ்கிருதச் சொற்கள்? அந்தச் சொற்களின் ஆங்கில மொழியாக்கத்தைத்தானே சேர்த்திருக்க வேண்டும்?
48.    நுட்பமான இந்தச் சமஸ்கிருதத் திணிப்போடு நுட்பமான இந்துத்துவா வாதமும் கலந்திருப்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
49.    தற்போதைய 10 ஆம் வகுப்பு, பின்னர் 11, 12 ஆம் வகுப்புகள், அதன் பின்னர் கல்லூரி என்ற
நடைமுறையை மாற்றி, ஐந்தாம் வகுப்பு வரையிலான ஐந்தாண்டுகள், பின்னர் 8 ஆம் வகுப்பு வரையிலான மூன்றாண்டுகள், பின்னர் நான்காண்டுகள் மேல் வகுப்புகள் என்று கொண்டுவரப் பரிந்துரைக்கப் பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த வகுப்புகள் முடிகிறபோது பொதுத் தேர்வு என்று இல்லாமல், இடைக்காலத்திலேயே குழந்தைகளின் கற்றல்
தேர்ச்சி நிலையைக் கவனித்து மதிப்பிடுகிற முறையைக் கொண்டுவரப் பரிந்துரைக்கப்பட்டிருக் கிறதாம். மேலோட்டமாகப் பார்த்தால் தேர்வுக் கொடுமையிலிருந்து குழந்தைகளை மீட்கிற வரவேற்கத்தக்க ஏற்பாடாகத் தெரிகிறது. ஆனால், தொலைநோக்கில் வசதியற்ற குடும்பங்களையும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளையும் வடிகட்டிப் பிரித்துத் தனியாக வேறு பள்ளிக்கு அனுப்புகிற ஏற்பாடு இதற்குள் இருக்கிறது. இது குழந்தைகளிடையே ஏற்றத்தாழ்வற்ற உணர்வை வளர்க்கப் பயன்படுமா?
50.    திருத்தப்பட வேண்டிய கல்விக் கொள்கை அல்ல இது. திரும்பப் பெறப்பட வேண்டிய கொள்கை.

Comment