தமிழக திருஅவைச் செய்திகள்
தமிழக திருஅவைச் செய்திகள்
- Author Mr.Christy --
- Monday, 11 Feb, 2019
திருத்தலத் திருவிழாக்கள்
கோவை மறைமாவட்டம் கோவை புதூர் அற்புத குழந்தை இயேசு தேர்த்திருவிழா ஜனவரி 3 வியாழன் அன்று கோவை மறைமாவட்ட முதன்மைகுரு அவர்கள் திருப்பலி நிறைவேற்றி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு நவநாள் நடைபெற்றது. இதில் இரட்சகர் சபை அருள்பணி மரியமகேஷ் அவர்களும், பெல்காம் இரட்சகர் சபை அருள்பணி மரியமகேஷ் அவர்களும், பெல்காம் ஆளுகுளு சபை அருள்பணி ஆஸ்டின் அவர்களும் சிறப்பித்தனர். ஜனவரி 13 தேதி ஞாயிறு பங்கின் திருவிழா நடைபெற்றது. இதில் காலை 8.00 மணிக்கு கோவை மறைவட்ட முதன்மை குரு அருள்பணி மெல்கியோர் அவர்களும் கோவை கார்மெல் கார்டன் பள்ளி முதல்வர் அருள்பணி ததேயு அவர்களும், மேய்ப்புபணி இயக்குநர் அருள்பணி செல்வராஜ் அவர்களும், மறைமாவட்ட சொத்துக்களின் கண்காணிப்பாளர் அருள்பணி ஆண்டனி வினோத் அவர்களும் சிறப்பித்தனர். மாலை 5.00 மணிக்கு கோவை ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆயர் தலைமையில் கூட்டுப் பாடற்திருப்பலியும், தேர்பவனியும் சிறப்பிக்கப்பட்டது. இறுதியில் நற்கருணை ஆசீருடன் விழா நிறைவுபெற்றது. இவ்விழா நிகழ்வுகளை பங்குத்தந்தை அருள்பணி. விக்டர் அந்தோணி ராஜ் ஆன்மகுரு அருள்பணி பயஸ் சவரிமுத்து மற்றும் பங்கு மக்கள் இணைந்து திறம்படச் செய்திருந்தனர்.
ஈரோடு ரயில்வே காலனி பங்கின் கிளைப்பங்கான லக்காபுரம் அற்புத குழந்தை இயேசு ஆலயத்தின் கொடி யேற்றம் ஜனவரி 10 வியாழன் அன்று அருள்பணி அலெக்ஸ்
அவர்கள் தலைமையில் திருப்பலியுடன் நடைபெற்றது. 13.1.2019 ஞாயிறு ஈரோடு மறைவட்ட முதன்மைகுரு அருள்பணி ஜான்சேவியர் தலைமையில் கூட்டுப்பாடற் திருப்பலியும் அற்புத குழந்தை இயேசுவின் ஆடம்பரத் தேர்பவனியும் சிறப்பிக்கப்பட்டது. இவ்விழா நிகழ்வுகளை பங்குதந்தை அருள்பணி. ஆரோக்கிய யூதா ததேயு மற்றும் இறைமக்கள் சேர்ந்து சிறப்பித்தனர்.
கரூர் மாவட்டம் புலியூர் அற்புத குழந்தை திருத்தலத்தில் ஜனவரி 10 வியாழன் கொடியேற்றம் செய்யப்பட்டது. ஜனவரி 20 ஞாயிறு காலை 11.00 மணிக்கு திருப்பூர் இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் அருள்பணி ததேயுஸ் அவர்கள் திருவிழா திருப்பலியை நிறைவேற்றினார். மாலை 5.30 மணிக்கு தாராபுரம் வட்டார முதன்மைகுரு அருள்பணி ஜோசப் தனராஜ் கூட்டுப்பாடற் திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து தேர்பவனியும் நற்கருணை ஆசீரும் சிறப்பிக்கப்பட்டது. இவ்விழா நிகழ்வுகளை பங்குத்தந்தை அருள்பணி. அந்தோணி ஞானபிரகாசம் அருட் சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
கோவை மறைமாவட்டம் கோவை விமான நிலைய சித்ரா புனித செபஸ்தியார் மற்றும் துணை பாதுகாவல் புனித குப்பர்தினோ சூசையப்பர் புதிய ஆலயத்தின் அர்ச்சிப்பு விழா மற்றும் தேர்த்திரு விழா ஜனவரி 19, 20, 21 அன்று சிறப்பிக்கப் பட்டது. ஜனவரி 19 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கோவை ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் அவர்கள் புதிய கொடி மரத்தை அர்ச்சித்து கொடியேற்றி வைத்து புதிய ஆலயத்தை புனிதப்படுத்தி திருப்பலி நிறைவேற்றினார். இறுதியில் உபகாரிகள் மற்றும் நன்கொடை யாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
நினைவு மலர், புதிய குறுந்தகடு, நவநாள் புத்தகம் மற்றும் ஜெபமாலை சிறப்பாக வெளியிடப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் சிறப்பானதொரு அன்பின் விருந்து அளிக்கப் பட்டது. தொடர்ந்து திருப்பலிகள் நடைபெற்றன. கோவை மறைமாவட்ட முதன்மை குரு தலைமையில் கூட்டுப்பாடற் திருப்பலியும் வான வேடிக்கையுடன் கூடிய புனிதர்களின் தேர் பவனியும் நடைபெற்றது. ஜனவரி 21 ஆம் தேதி பங்குத்தந்தை அருள்பணி. ஜோசப் சுதாகர் தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி உபகாரிகள், நன்கொடையாளர்களுக்காக ஒப்புக் கொடுக்கப்பட்டது. ஜனவரி 27 ஆம் தேதி மறை மாவட்ட பொருளாளர் தந்தை அருள்பணி. ஜோ பிரான்சிஸ் திருப்பலி நிறைவேற்றி கொடி இறக்கி வைத்தார். இப்புதிய ஆலயத்தை பொறியாளர் A.V. Propietors நிறுவனர் திரு. வின்சென்ட் ராஜ் அவர்களும் லியோ சர்னி வின்சென்ட் ராஜ் மற்றும் அவரது பணி குழுவினர்களும் சிறப்பாக செய்தனர். புதிய ஆலயத்தின் ஆர்க்டெக் வேலைகளை நிறுவனர் எட்வின் கிறிஸ்டஸ் குழுவினர் செய்திருந்தனர். இப்புதிய ஆலயம் பங்கு மக்களால் ஜெபம் மற்றும் பொருளுதவியுடன் கட்டப்பட்டது என்று பங்குத்தந்தைக் கூறினார். இவ்விழா நிகழ்வுகளை பங்குத்தந்தை அருள்பணி ஜோசப் சுதாகர் ஆலய கட்டுமான குழு, விழா குழுவினர் மற்றும் பங்கு மக்கள் இணைந்து செய்திருந்தனர். மறைமாவட்டத்தில் புனித செபஸ்தி யாருக்கு என்று எழுப்பட்ட ஒரே ஒரு பங்கு ஆலயம் இவ்வாலயம்தான். இது விமான நிலையத்திற்கு அருகில் உள்ளதால் விமானப் பயணிகளின் பாதுகாவலரான புனித குப்பத்தினோ சூசையப்பர் இவ்வாலயத்தின் துணைப் பாதுகாவலராக இருக்கின்றார். இந்தியாவில் இவருக்கென்று அர்ப் பணிக்கப்பட்டிக்கின்ற ஒரே ஆலயம் இந்த ஆலயம் என்பது குறிப்பிடத் தக்கது.
Comment