No icon

Fr. Gnani

தமிழக முதல்வர் அவர்களுடன் நம் வாழ்வு குடும்பம் மேற்கொண்ட சந்திப்பு

தமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார இதழான நம் வாழ்வு வார இதழ் சார்பாக, தமிழக முதல்வர் மாண்புமிகு மு..ஸ்டாலின் அவர்களை, நம் வாழ்வு வார இதழின் முதன்மை ஆசிரியர் குடந்தை ஞானி அவர்களும், துணை ஆசிரியர் அருள்பணி. ஜான் பால் அவர்களும் நேரில் சந்தித்து, பொன்னாடைப் போர்த்தி, நினைவுப் பரிசாக, மே மாதம் 17 ஆம் தேதி வெளியானநம் வாழ்வு வார இதழில் ஓவியர் காட்பாடி திரு. எம். . நிர்மல் அவர்களின் கைவண்ணத்தில் இடம்பெற்ற (பெரியாரின் கைத்தடி, அண்ணாவின் புத்தகம், கலைஞரின் பேனாவை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கும்)அட்டைப் படத்தை நினைவுப் பரிசாகவும், தமிழக முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்கள் மறைந்தபோது ஓவியர் காட்பாடி திரு. எம். . நிர்மல் அவர்களின் கைவண்ணத்தில் தமிழன்னையின் மடியில் கலைஞர் கிடத்தப்பட்டிருப்பதுபோல இடம்பெற்ற படத்தையும் அத்துடன் ஆசிரியரின் தலையங்கத்தையும், நம் வாழ்வுப் பணியாளர்களான திரு. அருள்தாஸ், திரு. சாலமோன், சென்னை பொறுப்பாளர் போரூர் திரு. இம்மானுவேல் ஆகியோர் நம் வாழ்வு வெளியீட்டு நூல்களையும் நினைவுப் பரிசாக வழங்கி மகிழ்ந்தனர். மேலும் நம் வாழ்வு வெளியிட்டு நூல்களை அரசு நூலகங்களுக்கு கொள்முதல் செய்யும் படியும், பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டங்கள் நம் வாழ்வுப் பணியாளர்களுக்கும் கிடைக்க ஆவனச் செய்யும்படியும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. மேலும் தமிழக ஆயர் பேரவையின் நிலைப்பாட்டின்படி, மதச்சார்பின்மையை ஆதரித்து, நம் வாழ்வு வெளியிட்ட தேர்தல் சிறப்பு மலரையும், இணைப்பிதழையும் முதல்வர் அவர்கள் ஆவலுடன் வாங்கிப் பார்த்து பாராட்டினார். மரியாதை நிமித்தமாக ஆசிரியர் குடந்தை ஞானி அவர்கள் மேற்கொண்ட முதல்வருடனான சந்திப்பு நம் வாழ்வின் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வேளையில் இதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து நம் வாழ்வின் வளர்ச்சியில் காலங்காலமாக உறுதுணையாக இருக்கும் தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் உயர்திரு.சா. பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

- ஆசிரியர்

Comment