No icon

அகில உலக பெண்கள் தினம் -  மார்ச் 8, 2019

தமிழக ஆயர் பேரவையின் பெண்கள் பணிக்குழு

"பெண்களே சமூகத்தின் முகவரி" : வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்ச்சமூகம் தாய்வழிச் சமூகம்தான். அன்று ஆரிய சூழ்ச்சியால் அடிமையாக்கப்பட்ட பெண்கள் இன்று சமூகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் முகவரியாய் விளங்குகிறார்கள்.
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையந் தழைக்குமாம்" என்றார் பைந்தமிழ் கவிஞர் பாரதி.
"வாணிகம் செய்யலாம் பெண்கள் - நல் வானூர்தி ஓட்டலாம் பெண்கள்" என்றார் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன். நீந்தத் தெரியாவிட்டால் என்ன, வெள்ளம் சொல்லித்தரும் வா என்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் துணிவுடன் முத்திரை பதித்து ஒளிர் கிறார்கள். எடுத்துக்காட்டாக,
    இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி.
    இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில்.
    இந்தியாவின் பாராளுமன்ற முதல் பெண் சபாநாயகர் மீரா குமார்.
    விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனா சாவ்லா ... மற்றும் பல
இவ்வாறாக அரசியல், கல்வி, கலை, அறிவியல், தத்துவம், சமயம், வரலாறு, விளையாட்டு, வணிகம் என்று அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கினாலும், உலகில் பெண்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வல்லுறவு, வரதட்சணை, ஆணவக் கொலை, சமத்துவமின்மை போன்ற அநீதிகளைக் களைய விடுதலை நாயகி அன்னை மரியாவின் வழியில் அணியமாவோம்.
நான் இதுவரை பெற்ற வெற்றிக்கும் பெறப்போகும் வெற்றிக்கும் காரணம் என் தாயாகிய ஒரு பெண் - ஆபிரகாம் லிங்கன். எங்கள் நாட்டின் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம் பெண்களுக்கு நாங்கள் கொடுக்கும் மரியாதை - நியூசிலாந்து அரசு. ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் ஆண்களிடம் சொல்லுங்கள். ஏதாவது செய்ய வேண்டுமென்றால் பெண்களிடம் சொல்லுங்கள் - மார்க்ரேட் தாட்சர்.
"நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக். 1:37) என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப திருஅவைக்கு முகவரி தந்த அன்னை மரியா. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற பொன்மொழிக்கேற்ப சமூகப் பணிக்கு முகவரி தந்தவர் அன்னை தெரசா.

Comment