No icon

மாநில அளவிலான மூன்றுநாள் ஆன்மிக நிகழ்வு

Grace - 2019

திருச்சியில் இயங்கிவரும் புனித வளனார் கல்லூரி இந்த ஆண்டு தன்னுடைய 175-வது ஆண்டு யூபிலி விழாவைக் கொண்டாடியிருக்கிறது. இந்த மகிழ்ச்சிகரமான ஆண்டில் 24-வது ழுசயஉந 2019 என்ற மூன்று நாள் ஆன்மிக நிகழ்வு பிப்ரவரி 15,16,17 தேதிகளில் நடைபெற்றது. 1996-ஆம் ஆண்டு மாணவர்களால் தொடங்கப்பட்ட இந்த சிறிய செபக்குழு இன்று ஆலமரம் போல்  வளர்ந்து நிற்கிறது. கல்லூரி நிர்வாகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் கொடுக்கின்ற மேலான ஆதரவில் இந்த மூன்று நாள் செபக் கூட்டம் அருமையாக இந்த ஆண்டும் நடந்தேறியுள்ளது. இதில் 1400 பேர் கலந்து கொண்டனர்.
முதல் நாள் தொடக்க விழாவில் கல்லூரியின் செயலர் தந்தை அந்தோனி பாப்புசாமி சே.ச அவர்கள் தலைமையில் துவக்க விழாவும் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது. இரண்டாம் நாளில் பங்கேற்பாளர்களுக்கு ஒப்பரவு அருளடையாளம் வழங்கப்பட்டது. சுமார் 55 குருக்கள் வருகை தந்து 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒப்புரவு அருளடையாளம் வழங்கினர். அதே நாளில் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி அவர்கள் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. அவர் தன்னுடைய மறையுரையில் ஒப்புரவு அருளடையாளம்  வழியாக இறைவனின் அருளும், ஆசீரும், மன்னிப்பும் எப்படி வழங்கப்படுகிறது என்பதை விளக்கினார். 
கடவுளோடு நாம் ஒப்புரவு ஆக வேண்டு மென்றால் சக மனிதர்களோடும், இயற்கைகளோடும் ஒப்புரவு ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்த மூன்று நாள்களிலும் இறைப்புகழ் வழிபாடு “தாழ்ச்சியின் பிறப்பிடமாகிய அன்னை மரியா, “தூய ஆவியின் வரங்களும் கனிகளும்”, “உள்மனக் காயங்கள்-விடுதலை நேரம், நற்கருணை ஆராதனை என்னிடம் வாருங்கள் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் போன்ற தலைப்புகளில் தியானச் செய்தி வழங்கப்பட்டது.
மூன்றாம் நாளில் கல்லூரியின் வளாக ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை அ.இருதயராஜ் சே.ச தலைமையில் கூட்டுப்பாடற்  திருப்பலி நடைபெற்றது. அருட்தந்தை ஜேம்ஸ் தம்பிராஜ் சே.ச தன்னுடைய மறையுரையில் இறைவனின் உயர்வான நிபந்தனையற்ற அன்பும், அருளும் எவ்வாறு நம்மீது பொழியப்பட்டுள்ளது என்பதை பொருத்தமான மேற்கோள்களுடன் விளக்கிச் சொன்னார். நாம் பாவத்திலிருந்து கழுவப்
பட்டு கடவுளின் பிள்ளைகளாகவும், விடுதலை பெற்றவர்களாகவும் இங்கிருந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இறுதியில் ழுசயஉந-2019 நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பேரா.ஜாய் பிரபு அவர்கள் இந்த ஆன்மிக நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவிய எல்லாருக்கும் நன்றி கூறினார். இறுதி ஆசீர், மந்திரித்த எண்ணெய் பூசுதல் நிகழ்வோடு இந்த மூன்றுநாள் ஆன்மிக நிகழ்வு இனிதே நிறைவுற்றது. இயேசு சபை நடத்தும்  கல்லூரிகள், மற்ற கத்தோலிக்க கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
இந்த மாணவ மாணவியரின் பெற்றோர்கள், நண்பர்கள் முன்னாள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். புனித வளனார் கல்லூரியில் படித்து விட்டு இப்போது இந்தியாவெங்கும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் மாணவர்கள் தங்களின் குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டதோடு, பொருள் உதவி மற்றும் தங்களின் உழைப்பையும் தாராளமாகத் தந்துள்ளனர். பங்கேற்பாளர்கள் எல்லாருக்கும் வளாகத்திலேயே உணவு சமைத்து வழங்கப்பட்டது. கடவுளின் அருளால்தான் இந்த நிகழ்வு ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது என்று பங்கேற்பாளர்கள் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அடுத்த வருடம் இந்த ழுசயஉந நிகழ்வு தன்னுடைய வெள்ளிவிழாவைக் கொண்டாடும் என்பது சிறப்பிற்குரியது. 

Comment