புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்
- Author குடந்தை ஞானி --
- Thursday, 20 Jun, 2019
மார்ச் 9 ஆம் நாள் காலை 9.30 மணி முதல் பகல் 1.00 மணிவரை தஞ்சை ஞானம் நகர், ஞானம் அரங்கத்தில் எக்ஸோடஸ் புற்றுநோய் உதவிமையம் மற்றும் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதற்கு பங்குத் தந்தை அருட்பணி. ஆரோக்கிய சுந்தரம் முன்னிலை வகித்தார். னுச. மு.ளு. செந்தில் குமார் இம்முகாமைத் தொடங்கி வைத்தார். தஞ்சை கேன்சர் சென்டர் புற்றுநோய் ஆய்வு நிபுணர்கள் ஆர்வத்தோடு இதில் சிறப்புப் பணியாற்றினார். காலை 10.00 மணி முதல் 11 வரை கருத்துப் பரிமாற்றமும் 11.00 மணி முதல் 12.00 மணி வரை மருத்துவ ஆலோசனையும் இடம் பெற்றது. உடலில் கட்டி, வாயில் புண், மலச்சிக்கல், உடற்சோர்வு, மார்பகத்தில் கட்டி, எடைக் குறைவு, காரணமில்லாமல் ஜூரம், மதுப்பழக்கம், ஆறாத புண் உதிரப்போக்கு, வெள்ளிபடுதல், உணவு, எச்சில் விழுங்வதில் சிரமம், பசியின்மை, குரலில் மாற்றம், மச்சம் மருவில் மாற்றம் ஆகிய குறை உள்ளவர்கள் 300 பேர் ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் பங்கேற்றனர். ஒவ்வொருவருக்கும் ரூ.1500 மதிப்பிலான பரிசோதனை இலவசமாகச் செய்யப்பட்டது. இம்முகாம் வெற்றிபெற பங்குத்தந்தை அருட்பணி ஆரோக்கிய சுந்தரம், அருட்
சகோதரி வெர்ஜினியா மாலதி, எக்ஸோடஸ் புற்றுநோய் உதவிமைய தலைவர் - உறுப்பினர்கள் தாளாளர், தூய மரியன்னை பள்ளி குழுமம் ஆகியோர் முன்தயாரிப்புடன் பேருதவி புரிந்தனர். இம்முகாம் மனித நேயத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு. நம் வாழ்வு இப்பணியினைப் பாராட்டுகிறது.
Comment