No icon

அருள்பணியாளர் அந்தோணி டி சில்வா

கோவா கத்தோலிக்க கல்லூரியில் பாஜக மாணவர்களின் அட்டூழியம்

கோவாவின் கத்தோலிக்கத் திரு அவையின் தலைவர்கள், பழைய போர்த்துக்கீசிய காலனி பகுதியில் அமைந்திருக்கும் கல்லூரியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாணவர்களின் அடாவடித்தனம் அதிகமாகி வருவதை கண்டு தங்கள் வருத்தத்தை தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து புனித சேவியர் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குனர் அருள்பணியாளர் அந்தோணி டி சில்வா, “சமீப காலமாக பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவானது கத்தோலிக்க திரு அவையால் நடத்தப்படுகிற புனித சேவியர் கல்லூரியில், பல்வேறு வழிகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையூறு விளைவித்து வருகின்றனர். இம்மாணவர்கள் இதுபோன்ற செயல்களால் தங்கள் கட்சியின் சித்தாந்தங்களை 60 ஆண்டு காலம் பழமை வாய்ந்த இந்த கத்தோலிக்க கல்லூரியில் திணிக்க முற்படுகிறார்கள். டிசம்பர் 2022 - 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாணவர்களை உள்ளடக்கிய  ஒரு குழுவானது வெற்றி பெற்றதை அடுத்து கல்லூரியில் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. இவர்களுக்கு துணையாக அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் என்கிற அமைப்பானது இருக்கின்றதுஎன்று கூறினார்.

கல்லூரியின் நிதிப் பொறுப்பாளர் அருள்பணியாளர் டோனி சலேமா “60 வருட பழமை கொண்ட எங்கள் கல்லூரியின் வரலாற்றில் இத்தகைய நிகழ்வு எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டமான ஒன்று. இது மட்டுமில்லாமல் கோவாவில் போர்த்துக்கீசியர்கள் ஏதாவது இந்து கோயில்களை இடித்து கிறிஸ்தவ கோயில்களை கட்டியுள்ளார்களா என்பதை ஆராய பல்லாயிரக்கணக்கான நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியானது இது போன்ற மாணவர்களின் அமைப்பு மூலமாக கத்தோலிக்க நிறுவனங்களில் தங்களின் சித்தாந்தங்களை பரப்புவதன் மூலமாக தங்களின் அரசியல் சக்தியை பிறருக்கு காட்ட முற்படுவது உண்மையாகவே வேதனைக்குரியது என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார். ஒரு காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கோவாவின் அரசியலும் சமூகத்திலும் அதிகமாக பங்கு வகித்தனர். தற்போது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் மட்டுமே உள்ளனர்மீதி 65 சதவீதம் இந்துக்கள் வசிக்கின்றனர்.

Comment