No icon

‘நீதியரசர் மிஷ்ரா கமிஷன்’

கறுப்பு தினம்

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மதம் மாறிய பட்டியல் இனத்தவரின் சலுகைகள் அனைத்தும் இரத்து செய்யப்படுகிறதுஎன்று 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து தலித் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்த ஆகஸ்ட் 10 ஆம் நாளை கறுப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி தருமபுரி மறைமாவட்டத்தில் பொம்மிடி அந்தோணியார் திருத்தலத்தில் தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் தலைமையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற்ற கறுப்பு தின ஆர்ப்பாட்டத்தில்நீதியரசர் மிஷ்ரா கமிஷன்பரிந்துரைத்ததை நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. தமிழக ஆயர் பேரவையின் SC/ST ஆணையத்தின் மாநிலப் பொருளாளர் M.F. ரமேஷ், கவி ஞானி அன்பு தீபன், தருமபுரி மறைமாவட்ட SC/ST ஆணையத்தின் இயக்குநர் தந்தை மோசஸ் ஆகியோருடன்  அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், இறைமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Comment