
சமூகக் குரல்கள்
- Author ஸ்ரீநிதி --
- Wednesday, 30 Aug, 2023
மாணாக்கர் விழுமியங்கள்!
“பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்களுக்கு அப்பால், மாணவர்கள் அறிந்தும் உணர்ந்தும் தெளிய வேண்டிய உன்னத விழுமியங்கள் ஏராளம். தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான பண்பாடுகளை, பெருமைகளை, இலக்கியங்களை, கலைகளை, வரலாற்றை மாணவ-மாணவியர்கள் அறிந்துகொள்ளுதல் வேண்டும்.”
- உயர்திரு. ச.பீட்டர் அல்போன்ஸ்,
தலைவர் - தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம்.
மாணவர் சமூகம் மீட்கப்பட வேண்டும்!
“நாங்குநேரி நிகழ்வைப் போன்று, பள்ளி கல்லூரிகளில் சாதி அடிப்படையிலான மோதல் நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்நிகழ்வுகள் சாதிய பிடியிலிருந்து மாணவர் சமூகத்தை மீட்பது எப்படி என்கிற கேள்வியை நம்முன் வைக்கின்றன.
சாதிய மோதல்களுக்குத் தீர்வு காண்பது அரசுக்கும், சமூகத்திற்கும் மட்டும்தான் உள்ள பொறுப்பு எனக் கடந்து சென்றுவிட முடியாது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இதில் முக்கியப் பொறுப்பு உள்ளது. தங்கள் குழந்தைகள் சாதிய வெறிக்கு அடிமையாகிவிடாமல் தடுப்பதும், கண்காணிப்பதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை.”
- உயர்திரு. தொல். திருமாவளவன்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
சரித்திரம் படைக்கும் வெற்றி!
“வாழ்வில் ஏற்படும் துன்பமான நிகழ்வுகளை நேர்மறையாக எடுத்துக்கொண்டு முன்னேறுபவர்கள், வாழ்க்கையில் வெற்றி பெற்று சரித்திரம் படைக்கிறார்கள்.”
- நீதியரசர் உயர்திரு. வெ.ராம சுப்பிரமணியன்,
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி
குடும்பமும், மகிழ்ச்சியும்!
“அதிகாரமும், பணபலமும் என்றைக்கும் ஒரு மனிதனுடன் நிரந்தரமாக இருப்பதில்லை. வாழ்க்கையில் புகழ், பதவி போன்றவற்றைவிட, அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.”
- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல தேசிக அடிகளார்
Comment