
சிக்னிஸ் தமிழ்நாடு 2023 ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம்
அகில உலகக் கத்தோலிக்க ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு (SIGNIS WORLD) அமைப்பின் கிளை அமைப்பான சிக்னிஸ் தமிழ்நாடு 2023 ஆம் ஆண்டுக்கான பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்டு 4 அன்று கோவை மறைமாவட்டத்தில் ஜீவஜோதி கலைத்தொடர்பு நிலையத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றன. இதில் சிறப்புக் கருத்தமர்வு நடத்தப்பட்டது; ‘அன்பின் அடிப்படையில் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையைப் பேசுதல்’ என்ற திருத்தந்தையின் அகில உலகத் தொடர்பு நாள் கருத்தின் அடிப்படையில் அருள்பணி. ஜெய் அவர்களின் உளவியல் மற்றும் சமூக விடுதலைக்கான சமூகத் தொடர்பாளர்களின் பங்களிப்புக் குறித்து, கருத்துகள் வழங்கப்பட்டன. சமூகத்திற்காகவும் திருச்சபைக்காகவும் பல்வேறு நிலைகளில் சிறப்பான செயல்பாடுகள் மூலமாக உழைத்துக் கொண்டிருக்கும் பத்துச் சான்றோர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பெருமைப்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சிக்னிஸ் தமிழ்நாடு அமைப்பின் 11 ஆம் ஆண்டு குறும்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த குறும்படங்களுக்கும், சிறந்த இயக்குநர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக சிக்னிஸ் இந்தியாவின் தலைவர் அருள்பணி. பீட்டர் விஜய் லோகோ மற்றும் செயலர் அருள்பணி. டேவிட் ஆரோக்கியம் அவர்களும் பங்கேற்றார்கள். தொடர்ந்து எதிர்காலச் செயல் திட்டங்களும், அவைகளை நடைமுறைப்படுத்த இலக்குகளும் தீர்மானிக்கப்பட்டன. இந்த அமர்வில் 5000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றது குறிப்பிட்டத்தக்கது.
Comment