No icon

​​​​​​​சமூகக் குரல்கள்

உலகின் தொன்மையான நாகரிகத்தை உடையவர்கள் நாம்! காட்டுமிராண்டியாகக் காடுகளில் அலைந்து திரிந்த மனிதனை நாகரிகமாக்கியது உழவு. அதனால்தான்உழந்தும் உழவே தலைஎன்று கொண்டாடுகிறது திருக்குறள். மண்ணைத் தாயின் மடியாக வணங்குகிற கலாச்சாரம் நம்முடையது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலத்தின் அடிப்படையே நம் வாழ்வின் அடையாளம். உழைப்புக்குரிய இலாபம் கிடைத்தால் போதும் என்று நாம் நினைத்தவரை நமக்குக் கேடு இல்லை. உழைப்பை மீறிய இலாபத்திற்கு நாம் அடிமையாக்கப் பட்டபோது ஆரம்பித்தது பிரச்சினை. தாய்ப்பாலும், பவுடர் பாலும் ஒன்றாகுமா? அதுதான் இயற்கை முறை விவசாயத்திற்கும், செயற்கை முறை விவசாயத்திற்கும் உள்ள வித்தியாசம் தமிழர்களே!”

- திருமிகு. நம்மாழ்வார், மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி

படிக்க வேண்டும், அதன்படி நடக்க வேண்டும். இது கல்விக்கு மட்டுமில்லை, வாழ்க்கைக்கும் பொருந்தும். நாம் என்னவாகப் போகிறோம் என்பதைக் கல்வி தீர்மானிக்கும். யாராக விரும்புகிறோம் என்பதை நாமே தீர்மானிக்கிறோம். இரண்டு வயதிலேயே பள்ளிக்கு அனுப்பப்படுகிறோம். குறைந்தபட்சம் 18 வயது வரை கற்பதற்கான காலமாக வைத்திருக்கின்றோம். 15 ஆண்டுகள் என்ன கற்றுக்கொண்டோம் என்று எப்போதாவது யோசித்திருக்கின்றோமா? நம்பிக்கையை, முயற்சியை, உழைப்பை, ஒழுக்கத்தை, நேர்மையை, ஒற்றுமையை, தியாகத்தை, உதவும் மனப்பான்மையை... என நற்பண்புகள் தேற வேண்டிய பருவத்தில், நமக்குப் புத்தகங்களை மனப்பாடம் செய்யவே நேரம் போதவில்லை

- திரு. இராதாகிருஷ்ணன், ..., சென்னை மாநகராட்சி ஆணையர்

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் இடுகின்ற இந்த ஒவ்வொரு கையெழுத்தும் தமிழ்நாட்டு கல்வி உரிமைப் போராட்டத்தின் உயிர் எழுத்தாக என்றென்றும் நிலைத்திருக்கும். தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. தமிழ்நாட்டில்நீட்தேர்வால் இன்னொரு மரணம் நிகழக் கூடாது. ஒன்றிய அரசு நமது மாநில அரசின் முயற்சிகளைத் தொடர்ந்து அலட்சியம் செய்து கொண்டிருந்தால், அடுத்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போன்ற வீரமிக்கப் போராட்டத்தைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.”

- மாண்புமிகு. உதயநிதி, விளையாட்டுத் துறை அமைச்சர், தமிழ்நாடு

Comment