சென்னை - மயிலை மரியாயின் சேனை
- Author சகோ. பபின் தாஸ் --
- Monday, 24 Jun, 2019
சென்னை - மயிலை உயர் மறைமாவட்ட மரியாயின் சேனையின் இளையோர் கருத்தரங்கு மார்ச் 31 ஆம் தேதி மதுரவாயல் புனித அந்தோணியார் ஆலயத்தில் நடை
பெற்றது. இதில் மதுரவாயல், சின்மயாநகர், கோல்டன் ஜார்ஜ் நகர் ஆகிய பங்குகளிலிருந்து சுமார் 230 இளைஞர், இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கை மதுரவாயல், புனித பிலார் அன்னை கொமித்சியத்தின் ஆன்ம இயக்குனர் அருட்பணி. ஜேசுதான் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். கொமித்சியத்தலைவி சகோ. ஜாய்ஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். பங்குப்பேரவைத் துணைத்தலைவர் சகோ.ஜான்வல்தாரிஸ் அவர்கள் இளைஞர் களுக்கு உற்சாகமூட்டும் வகையில் சிறப்புரை நிகழ்த்தினார். உதவிப்பங்குத் தந்தையர்கள் அருட்பணி.மைக்கேல் பிரகாஷ் மற்றும் அருட்பணி.பிரிட்டோ ஆகியோர் இணைந்து இளைஞர்களை மகிழ்விக்கும் வகையிலும், அறிவுத் திறனை வளர்க்கும் வகையிலும் நிகழ்ச்சி
கள் நடத்தி இளைஞர்களை ஆர்வத்துடன் பங்கேற்கச்செய்தனர். சென்னை ரீஜியா
வின் துணைச்செயலர் சகோ. ஜெயசீலி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தேநீர் இடை
வேளைக்குப்பிறகு இளையோர் கியூரியா
துணைத்தலைவர் சகோ.திலக் அவர்கள்
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களின் ஆன்மிக வாழ்விற்குத் தடையாக இருப்பவை எவை? என்ற தலைப்பில் இளைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து சென்னை ரீஜியாவின் ஆன்ம இயக்குனர் அருட்பணி. இக்னேஷியஸ்தாமஸ் அவர்கள் இளைஞர்கள் தங்களுடைய பொது வாழ்விலும் ஆன்மிக வாழ்விலும் பிரகாசிப்பதற்குத் தேவையான பத்து வகையான வழிமுறைகளை கற்றுத்தந்தார். மேலும் இளைஞர்கள்தங்கள் பிரசீடியங்களில் தங்களுடைய பங்களிப்பை எவ்வாறு அளிக்கலாம்? மேலும் இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் கருவியாக பிரசீடியங்களை எவ்வாறு கையாளலாம்? என்பது குறித்த விளக்கங்களைக் கொடுத்தார். இறுதியில் துணைத்தலைவர் சகோ.ஜார்ஜ் அவர்கள் நன்றியுரை வழங்கினார். சேனைச்சங்கிலி ஜெபம், சேனை இறுதி ஜெபம் சொல்லப்பட்டு கருத்தரங்கு மதியம் 1.30 மணி அளவில் இனிதே நிறைவுபெற்றது. கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்தக்கருத்தரங்கு நடத்துவதற்கு கொமித்சிய செயலர் செல்வி.ஜெனிபர், சென்னை ரீஜியா தலைவர் மற்றும் அலுவலர்கள் மற்றும் மதுரவாயல் கொமித்சியத்தின் ஆன்ம இயக்குனர் உதவினர்.
Comment