No icon

தேர்தல் களமும் காலமும்

கல்லும், பல்லும் முக்கியமில்லை; சொல்லும், செயலும் முக்கியம்!

18-வது மக்களவைத் தேர்தல் களத்தில் மிகவும் பரபரப்பான பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த தேர்தலில் திரு. உதயநிதி தங்கள் கூட்டணிக் கட்சிக்காகப் பிரச்சாரத்தில் செங்கல்லை வைத்து பிரச்சாரம் செய்தது மிகவும் பிரபலமாக இருந்தது. அதனை மையமாக வைத்து திரு. எடப்பாடி பழனிச்சாமி, ‘வெறும் கல்லை வைத்துப் பிரச்சாரத்தை எத்தனை வருடங்களாகச் செய்வீர்கள்?’ என்று உதயநிதியைக் கிண்டல் செய்தார். அதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் மோடியுடன் சிரித்துப் பேசிய புகைப்படத்தைக் காட்டி, ‘பல்லைக் காட்டிக்கொண்டு இருக்கிறார்என்று குற்றம்சாட்டினார் உதயநிதி. அதற்குப் பதிலாக எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும் பிரதமரோடு சிரித்துப் பேசிய புகைப்படத்தைக் காட்டி, ‘இவர்கள் என்ன செய்கிறார்கள்? இவர்களும் பல்லைக் காட்டிக்கொண்டுதானே இருக்கிறார்கள்என்று குற்றம் சாட்டினார். இவ்வாறு இருவரும் கல்லையும், பல்லையும் வைத்துப் பிரச்சாரம் செய்கின்றார்கள். தமிழ்நாட்டு மக்களுக்குக் கல்லும், பல்லும் முக்கியமில்லை; சொல்லும், செயலும்தான் முக்கியம். எதிர்கால இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும், ஒவ்வொரு தொகுதிக்கும் என்ன செய்தீர்கள்? தற்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள்? என்பதுதான் முக்கியம்.

அதிகமான வேட்பாளர்கள் உள்ள தொகுதி எது தெரியுமா?

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யும் கடைசி தினம். வேட்பு மனு சரிசெய்யப்பட்டுள்ளது. அதில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும், .தி.மு.. 34 தொகுதிகளிலும், பா... 23 தொகுதிகளிலும், தி.மு.. 22 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் இதரத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 609 சுயேட்சை வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். இதில் கவனிக்க வேண்டிய தொகுதி கரூர் தொகுதி, இந்தத் தொகுதியை வெல்ல 50 பேர் போட்டியிடுகின்றனர். யார் வெற்றி பெறுகின்றார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம்.

10,000 கோடி தேர்தல் பத்திரங்கள்!

தேர்தல் பத்திரங்கள் மூலமாகத் தொழில் அதிபர்களை மிரட்டித் தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் சூழ்நிலையில், தேர்தல் பத்திரம் அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக 10,000 பத்திரங்களை அச்சிட ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது என்ற செய்தி தற்பொழுது அம்பலமாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்குத் தலா ரூ.1 கோடி மதிப்புள்ள 10,000 பத்திரங்களை அச்சிட ஒப்புதல் அளித்தது வெளிவந்துள்ளது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதை நிறுத்த எஸ்.பி..க்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது தெரிய வந்துள்ளது. புதுவிதமான கையூட்டு வாங்கும் முறையும், கையூட்டு வாங்குவதைச் சட்டப் பூர்வமாகச் செய்து, ஊழல் அற்ற அரசு என்று பெயர் வாங்குவதும் வெட்கக்கேடான செயலாக உள்ளது. இனிமேலாவது நேர்மையான அரசியலையும், உண்மையான அரசியல்வாதிகளையும் நாம் உருவாக்க முயல்வோம்.

Comment