No icon

சமூகக் குரல்கள்

சாதாரணமாக ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது சில வார்த்தைகளை விட்டுப் படிக்கலாம். ஆனால், மொழிபெயர்ப்பின் போது முழு புத்தகத்தையும், எந்தவொரு வார்த்தையையும் விட்டுவிடாமல் படிக்க வேண்டும். ஒரு மொழியில் இருப்பதை அப்படியே பிற மொழியில் மொழிபெயர்க்காமல், அதில் இடம்பெறும் கதாபாத்திரம், காலச்சூழல், வட்டார வழக்குக்கு ஏற்ப மொழிபெயர்க்க வேண்டும். அதுபோன்று, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும்போது அப்படியே மொழிபெயர்க்காமல், ஆங்கில இலக்கணத்துக்கு ஏற்றவாறு சில சொற்றொடர்களை மாற்றியமைக்க வேண்டும். மொழிபெயர்ப்பை முறையாக அமைக்காவிட்டால், அது எழுத்தாளருக்குச் செய்யும் துரோகமாகிவிடும். தமிழில் இருந்து பிற மொழியில் மொழிபெயர்க்கும்போது, அந்த எழுத்தாளரின் எழுத்து உலகமயமாகிறது. பொதுவாழ்வில், தான் அறிந்த ஒன்றை மற்றவருக்கு ஒருவர் தெரிவிக்கும்போது, அவர்களுக்குப் புரியும் வகையிலான மொழிநடையில் கூறுவதன் மூலம் அனைவரும் மொழிபெயர்ப்பாளர்கள்தாம்.”

- திருமதி. பிரபா ஸ்ரீதேவன், சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி

கணினித் தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ்நாடு அரசும், தமிழறிஞர்களும் ஏராளமான பணிகளை ஆற்றி வருவதோடு, அதற்கான செயல் திட்டங்களையும் வகுத்துச் செயல்பட்டு வருகின்றனர். இன்றைய இளைய தலைமுறையினர் மரபிலக்கணம், மரபிலக்கியம், நவீன இலக்கியம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை பெறுவதோடு, கணினித் தமிழ் சார்ந்த தொழில் நுட்பங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும். தமிழின் மேம்பாட்டுக்குக் கணினித் தமிழ் முயற்சிகள் மேலோங்குவது பெருந்துணையாக அமையும்.”

- பேராசிரியர் Y. மணிகண்டன், தமிழ் மொழித்துறையின் தலைவர்

மாணவர்கள் தாம் கற்ற கல்வியையும், பெற்ற அறிவையும் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். மேலும், நமது நாட்டில் ஜி.டி.பி.யைச் சர்வதேச தரத்துக்கு உயர்த்த மாணவர்கள் பெரும் பங்கு வகிக்க வேண்டும். இந்தக் கல்வி நிறுவனம் பெண் கல்வி, அனைவருக்கும் உயர் கல்வி என்பதை ஊக்குவிக்க வேண்டும்.”

- திரு. கோ. விசுவநாதன், வி..டி. வேந்தர்

Comment