No icon

‘நம் வாழ்வு’ வார இதழ் பொன்விழா ஆண்டில் கோவை, உதகை மறைமாவட்டங்களின் வாசகர் வட்ட சந்திப்பு

தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகமானநம் வாழ்வுவார இதழின் பொன்விழா ஆண்டில் முதன்முறையாகக் கோவை-உதகை மறைமாவட்டங்களின் வாசகர் வட்ட சந்திப்பு ஜூன் மாதம் 23-ஆம் நாள் கோவை மறைமாவட்டம், ஜீவ ஜோதி மேய்ப்புப் பணி மையத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் அவர்களின் ஆசியுடன், காலை 9.00 மணிக்குக் கோவை மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருள்பணி. ஜான்ஜோசப் ஸ்தனிஸ் அவர்கள் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

கருத்தமர்வின் தொடக்கமாகப் புனித காணிக்கை அன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வரவேற்பு நடனம் ஆடினர். ‘நம் வாழ்வுஇதழின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் செ. இராஜசேகரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இவ்விழாவிற்குக் கோவை மறைமாவட்டப் பள்ளிகளின் கண்காணிப்பாளர் அருள்முனைவர் P. ஆரோக்கிய ததேயூஸ் அவர்கள் தலைமை தாங்கினார். பிரான்சிஸ்குவின் புனித காணிக்கை அன்னை சகோதரிகள் சபையின் தலைமை அன்னை பேரருள்சகோதரி பபி லினெட் FSPM வாழ்த்துரை வழங்கினார். புனித மிக்கேல் துறவறச் சகோதரர்கள் சபையின் அதிபர் பேரருள்சகோதரர் N. அந்தோணி ராஜா BSM மற்றும் கோபிசெட்டிப்பாளையம், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் திரு. அரசு தாமஸ் அவர்களும் வாழ்த்திப் பேசினர்.

சிறப்பு விருந்தினராக சென்னை மனித வளத் தலைமை மேலாளர் முனைவர் . இருதயராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். வாசிக்கும் பழக்கமே உறவை மேம்படுத்தவும், வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்தவும், கருத்து வளமிக்க கலந்துரையாடல் மேற்கொள்ளவும் உதவி செய்யும் என்ற சிந்தனைகள் வழங்கப்பட்டன. விழாவில் 50 ஆண்டு கால நம் வாழ்வின்காலச்சுவடுஒலி-ஒளிக் காட்சியாக ஒளிபரப்பப்பட்டது. கோவை, உதகை மற்றும் சுல்தான்பேட்டை மறைமாவட்டங்களிலிருந்து ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்டநம் வாழ்வுவாசகர்கள், ஆசிரியர்கள், அருள்சகோதரிகள் கலந்துகொண்டு இவ்விழாவைச் சிறப்பித்தார்கள்.

நம் வாழ்வுவார இதழின் துணை ஆசிரியர் அருள்பணி. அருண்பிரசாத் அவர்கள் கலந்துரையாடலை வழிநடத்தினார். இக்கலந்துரையாடலில் பலரும்நம் வாழ்வுஇதழின் பயன்பாடு பற்றியும், மக்கள் மனத்தில் இவ்விதழ் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் குறிப்பாக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது சிறுபான்மையினர் மத்தியில் ஏற்படுத்திய அரசியல் விழிப்புணர்வைப் பற்றியும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். ‘நம் வாழ்வுஇதழின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவி செய்யும் விளம்பரதாரர்கள் விழா மேடையில் சிறப்பிக்கப்பட்டார்கள். நிகழ்வில்நம் வாழ்வுஇதழின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் செ. இராஜசேகரன் அவர்களின் புதிய படைப்பானYouth and Media Digital Evangelizersஎன்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வுகளை மேற்கு மண்டலநம் வாழ்வுபொறுப்பாளர் திரு. கிறிஸ்டி மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். நிகழ்வுகளைப் புனித காணிக்கை அன்னை மகளிர் மேல் நிலைப் பள்ளி ஆசிரியை திருமதி. ஜாஸ்மின் ரோஸி தொகுத்து வழங்கினார். இறுதியில்நம் வாழ்வுவார இதழின் துணை ஆசிரியர் அருள்பணி. ஜெ. ஞானசேகரன் அனைவருக்கும் நன்றி கூறினார். பிற்பகல் 1.30 மணியளவில் மதிய உணவோடு இவ்விழா இனிதே நிறைவு பெற்றது.

                       

Comment