No icon

பட்டியலினத்தவரின் உரிமைக்காக ஒன்றுதிரண்ட சிறுபான்மையினர்

தமிழ்நாடு-புதுச்சேரி  கத்தோலிக்கத் திரு அவையானது பட்டியலினக் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் சம உரிமைகளுக்காக ஒன்று திரண்டனர்.

இந்தியாவில் உள்ள தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் முஸ்லிம்களின்  74 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட பட்டியல் சாதி (SC) உரிமைக்கான  தொடர்ச்சியான போராட்டத்தைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 10 - ஆம் நாள் கறுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த மறுப்புஇந்து மதத்தைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும்  எவரும் பட்டியலினத்தவராகக் கருதப்பட மாட்டார்கள்என்ற குடியரசுத் தலைவரின் அரசியலமைப்பு ஆணை (பட்டியலிடப்பட்ட சாதிகள்) 1950, பத்தி 3-  தழுவியதாகும். இந்த உத்தரவு இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற முன்னுரைக்கு முரணானது. அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 15, 17 மற்றும் 25-இல் உள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும்மதத்தின் அடிப்படையில் பாகுபாடு உடையதாகவும் உள்ளது.

தமிழ்நாடு  ஆயர் பேரவை (TNBC) 18 மறைமாவட்டங்களில் தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகப்  பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அனைத்து SC/ST மறைமாவட்டப் பணிக்குழுக்களும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள முயற்சிகளுக்குத் தலைமை தாங்கி மறைமாவட்டச் செயலர்கள் மற்றும் களப்பணியாளர்களைக் கொண்டு சுற்றறிக்கைகளை வெளியிட்டது. பல மறைமாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டனசென்னை-மயிலை, பாண்டிச்சேரி-கடலூர், மதுரை உயர் மறைமாவட்டங்கள் மற்றும் செங்கல்பட்டு, வேலூர், தஞ்சாவூர், கும்பகோணம், தருமபுரி, கோவை, சிவகங்கை, திண்டுக்கல், பாளையங்கோட்டை, கோட்டாறு, தூத்துக்குடி, மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மறைமாவட்டங்கள் உள்பட 17 மறைமாவட்டங்களில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டங்களில் 6,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பட்டியலினத்தார்/பழங்குடியினர் பணிக்குழுவின் தலைவரும், குடந்தை ஆயருமான மேதகு ஜீவானந்தம், பிரான்சிஸ்கன் கப்புச்சின்  சபையைச் சார்ந்தவரும், பட்டியலினத்தார்/பழங்குடியினர் பணிக்குழுவின் செயலருமான அருள்பணி. நித்ய சகாயம், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் முஸ்லிம்களுக்கான உரிமைகளை  ஆதரித்து மக்களை ஒருங்கிணைத்தனர்.

செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன் அந்தோணி சாமி, தூத்துக்குடி ஆயர்  அந்தோணி ஸ்டீபன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  (விசிக) மாநில பொதுச் செயலர்  திருமிகு. சிந்தனைச் செல்வன், முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், மனிதநேய மக்கள் கட்சி, கிறிஸ்தவர்களின் தேசியப் பேரவை  (NCDC), தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கம் (DCLM) மற்றும் தலித் கிறிஸ்தவ மக்கள் குழுக்கள்  (DCPC) ஆகிய மக்கள் இயக்கங்கள் மற்றும் பல்வேறு மதப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்திற்குப் பல தனிநபர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவு வலுத்துள்ளது. மேலும், அரசியல் அழுத்தத்தைப் பிரயோகிக்க தேசிய அளவில்இந்தியாமக்கள்  கூட்டணி (I.N.D.I.A.), தி.மு.. உள்ளிட்ட கட்சிகளிடம்  உதவிபெற தமிழ்நாடு திரு அவை  முடிவு செய்துள்ளது.

மேதகு ஆயர் ஜீவானந்தம், தலைவர்

அருள்பணி. நித்ய சகாயம், மாநிலச் செயலர்

தமிழ்நாடு ஆயர் பேரவை, பட்டியலினத்தார் / பழங்குடியினர் பணிக்குழு

Comment