No icon

Archbishop Antony Pappusamy

பேரொளியைக் கண்டனர்

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகை யும் படைத்தபோது, மண்ணுலகம் உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின்மீது இருள் பரவி யிருந்தது. அப்போது கடவுள், ‘ஒளி தோன்றுக’ என்றார். ஒளி தோன்றிற்று” (தொநூ 1:1-3) என்னும் வார்த்தைகளோடுதான் யூதர்களின்எபிரேய விவிலியமும், கிறிஸ்தவர்களின் விவிலியமும் தொடங்குகின்றன. மண்ணுலகில் நிறைந்திருந்தஇருளை ஒளி ஏற்றி அகற்றுகின் றார் கடவுள். பகவத் கீதையில்பார்த்திபனுக்கு மொழிகின்ற கிருஷ்ணரும். “அனைத்தையும் ஒளிர்விக்கும் ஒளியே நிலையானஉண்மை. ஒவ்வொருவரின் உள்ளத் தில் ஒளிரும் இந்த ஒளி அன்றாட அனுபவங்களால் நாம் பெறும்ஞானத்தால் நமக்குப் புலப்படு கிறது” (13:18) என்கிறார். மேலும்,“விண்ணின் ஒளியும் மண்ணின் ஒளியும் அல்லா ஒருவரே. முத்துப்போன்ற நட்சத்திரமாய், ஒலிவஎண்ணெயின் தீபமாய் எரியும்அந்த ஒளிக்குள் தான் விரும்பு பவரை அல்லா அழைக்கிறார். அந்த ஒளியே வாழ்வின் வழி” என திருக்குர் ஆன் (24:35) பதிவு செய்கிறது.

இவ்வாறாக, சமயங் கள் அனைத்திலும் ஒளி இருள் போக்குவதாக, உண்மைக்கு அழைத்துச் செல்வதாக, அநீதியை அழிப்பதாக முன்வைக்கப்படுகிறது. இந்த ஒளித் திருவிழாவை கிறிஸ்து பிறப்பு விழாவாகக் கொண்டாடுகிறோம். ஒளிஆற்றல் தருவது, உயிரின் வளர்ச்சி, தாவரத்தின் வளர்ச்சி,உடலின் செரிமானம், உயிர்கள் இனப்பெருக்கம் அனைத் திற்கும் கிரியா ஊக்கியாக இருப்பது ஒளி அல்லதுஒளியின் வெப்பம். இவ்வா றாக, அனைத்திற்கும் ஆற்றல் தரும் இந்த ஒளி எல்லாக் காலமும் இருக்கக் கூடியது. யார் ஒருவர் இந்த ஒளியைச் சரியாகக் கையாளுகிறாரோ, ஒளியில் செயல்படுகிறாரோ அவர் வெற்றியாளராகின்றார். ஆகையால்தான் இயேசுவும் பிறவிப் பார்வையற்றவர் ஒருவருக்குப் பார்வை தரும்நிகழ்வில், ‘இருள் வருகிறது.

அப்போது யாரும் செயலாற்ற இயலாது’ (யோவா 9:4) என்கிறார். ஆகவே, நம்மில்,நமக்குள் இருக்கும் அக ஒளியைப் பயன்படுத்தி வெளி இருள் போக்கிட முற்படவேண்டும்.  இன்று நமது நாடு‘வளர்ச்சி’ என்ற மாயையினால் மக்களை இருளில் தள்ளியிருக்கிறது. மதப் பயங்கரவாதம் மக்களின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இத்தகைய சூழலில் நாம் அனை வரும் ஒளியின் மக்களாக உருமாற வேண்டியது காலத்தின்அவசியம். இதனை முழுமையாக உணர்ந்திட ‘நானே உலகின்ஒளி என்னை பின்செல்வோர் இருளில் நடவார்’ என்ற இயேசுவின் வார்த்தையை பேரொளியாக மாற்றிடுவோம். வருகின்ற கிறிஸ்து பிறப்பு பெரு விழாவில் அந்த பேரொளியைக் கண்டு ஞானம் பெறுவோம். இருளை எதிர்த்து ஒளி வளர்ப்போம்.

பாலன் இயேசுவில் அன்பிற்குரியவர்களே! தமிழக இறைமக்களின் தனிப்பெரும் ஒரே வார இதழான  நம் வாழ்வு வார இதழின் வாசகர்களே! சந்தாதாரர்களே!

உங்கள் அனைவருக்கும் பாலன் இயேசுவின் பிறப்புவிழா மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Comment