பரிந்துரைகள்
கொரோனா காலத்தில் ‘இனியவை நாற்பது’
`பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்” என்கின்றார் இயேசு (மத் 11:28)
இறை இயேசுவில் பிரியமுள்ள பங்கு தந்தையர்களே, குருக்களே, இருபால் துறவியரே, இறைமக்களே,
உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், வணக்கமும்.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கீழ்க்கண்ட பரிந்துரைகளை உங்கள் முன் வைக்கின்றேன்.
1. சுமூகமான சூழ்நிலை உருவாகும் வரை பங்குக் கோயில்களைத் தவிர, துறவற அருள்பணியாளர்களின் இல்லங்களைத் தவிர வேறு எங்கும் திருப்பலி நடைபெறாது. திருப்பலியில் மக்களின் பங்கேற்பு தவிர்க்கப்பட வேண்டும்.
2. சூழலுக்கு ஏற்றவாறு ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்தலாம்.
3. சிலுவைப்பாதையை பங்கு இல்லத்திலிருந்தே வாசித்து ஒலிப்பெருக்கி வழியாக மக்கள் சிலுவைப்பாதையைச் செய்ய உதவுலாம்.
4. நீங்கள் விரும்பினால் ஒருசில இரக்கச் செயல்களில் ஈடுபடலாம்.
4.1 அரசு அதிகாரிகள் வழியாக, உணவின்றித் தவிக்கும் கூலித்தொழிலாளர்களுக்கும் சாலையோரத்தில் வாழ்வோருக்கும், முதியோருக்கும் உணவு அளிக்கலாம்.
4.2 மக்களுக்கு உதவி செய்யும் வழிகாட்டும் அரசு ஊழியர்களுக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் சிறுசிறு உதவிகளை அரசுப் பணியாளர்கள் வழியாகச் செய்யலாம். (உ.ம்.தண்ணீர் வழங்குதல்)
5. நேரத்தை நல்ல முறையில் செலவழிக்கச் சில வழிமுறைகள்:
5.1 பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு மீட்பின் வரலாற்றை கதைவழியாக எடுத்துச் சொல்லலாம்.
5.2 பெற்றோர்கள் பிள்ளைகளோடும் பிள்ளைகள் பெற்றோரோடும் உரையாடுவதால், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே உள்ள உறவு வளர வாயப்புண்டு.
5.3 சமையல் கலை, வீட்டை அழகுப்படுத்தும் கலை, தோட்டக்கலை ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.
5.4 நல்ல நூல்கள் மற்றும் பத்திரிக்கைகளைப் படிக்கலாம்.
5.5 கேரம், செஸ் போன்ற வீட்டுக்குள் விளையாடக்கூடிய விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
6. நல்ல பாடல்களைக் கேட்கலாம்.
7. நல்ல படங்களைப்பார்க்கலாம் (லடிரவரநெ இணையதள சேவை வழியாக கிறித்தவம், திருஅவை , இயேசு தொடர்பான படங்களைப் பார்த்து மகிழலாம்.)
8. பாடல்களைப் பாடி மகிழலாம்.
9. தியானம் செய்யலாம்.
10. மற்றவர்களுக்காக, குறிப்பாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மன்றாடலாம்.
11. செபமாலை சொல்லலாம்.
12. குடும்ப செபத்தில் ஈடுபடலாம்
13. 23வது திருப்பாடலையும், 91வது திருப்பாடலையும் அடிக்கடிப் படிக்கலாம்.
14. கதை, கவிதை, கட்டுரைகளை எழுதலாம்.
15. சுயசரிதையை எழுதலாம்.
16.சுய மனப்பரிசோதனைச் செய்யலாம்.
17. அலைபேசி மூலம், பயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டலாம்.
18. 10ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் தங்களைத் தேர்வுக்குத் தயார் செய்துகொள்ளலாம்.
19. சிலுவைப்பாதை செய்யலாம்
20. புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கலாம்
21. விவிலியத்தைப் படிக்கலாம். குறிப்பாக, விடுதலைப் பயணத்தையும், லூக்கா நற்செய்தியையும், திருத்தூதர் பணிகளையும் படிக்கலாம்.
22. வீட்டுக்குள்ளேயே 8 வடிவில் நடக்கலாம்.
23. உடற்பயிற்சி செய்யலாம்.
24. ஓவியங்களை வரையலாம்.
25. கணினி, கைபேசி ஆகியவற்றைப் பயன்படுத்தும் முறைகளைக் கற்றுக்கொள்ளலாம்.
26. கோலங்கள் வரையக் கற்றுக் கொள்ளலாம்.
27. இயற்கையின் அழகை இரசிக்கலாம்
28. நல்ல ஒப்புரவு அருள் அடையாளத்திற்குத் தயாரித்துக் கொள்ளலாம்.
29. அமைதி தரும் ஆனந்தத்தை அனுபவிக்கலாம்.
30. எதிர்காலத்துக்குரிய திட்டங்களைத் தீட்டலாம்.
31. கைவினைப் பொருள்களைத் தயாரிக்கலாம்
32. நடனக்கலை, நாடகக் கலை, சினிமா கலை சம்பந்தப்பட்ட நூல்களைப் படிக்கலாம்.
33. ஆங்கிலம் பேசுகின்ற, எழுதுகின்ற திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம்.
34. பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, பாட்டுப்போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற போட்டிகளில் கலந்துகொள்ள ஆசைப்படுகின்றவர்கள் தங்களைத் தயாரித்துக் கொள்ளலாம்.
35. இப்படிப்பட்டச் சூழ்நிலை நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கலாம்.
36. நட்பு, உரையாடல் பற்றிய நூல்களைப் படிக்கலாம்
37. பெற்றோர்கள் குழந்தைகளின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கலாம்.
38. சமாதானம் செய்துக் கொள்ள ஓர் அருமையான நேரம் இது.
39. பூகோளப் படத்தைப் பார்த்து நாடுகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
40. ஆன்ம வழிகாட்டிகளோடு அலைபேசி வழியாகப் பேசி, ஆன்மிக வாழ்வில் மேன்மேலு
Comment