No icon

அருள்நிதி எஸ். சதானந்தம், சூராணம்

மருத்துவம் பேசுகின்றது

 

ஆவாரை - நெல்லி கசாயம்

150 மி.லி. நீரில், 100 கிராம் அன்று மலர்ந்த ஆவாரம் பூவைப்போட்டு, மூடி வைத்து நீர் 100 மி.லி.யாகச் சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும். ஐந்து நெல்லிக்காய்களை விதை நீக்கி 50 மி.லி. கிடைக்கும் வகையில் சிறிது நீர்விட்டு அரைத்து, சாறு எடுக்க வேண்டும். நெல்லிச் சாறையும், ஆவாரம் பூ டிகாக்ஷனையும் தலா 50 மி.லி. கலந்து, சிறிது தேன் சேர்த்து பருகவும்.

பலன்கள்:

கணையத்தை சரி செய்து இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். வெறும் வயிற்றில் பருகிவர, இன்சுலின் சுரப்பு சீராகும்.

   ஆவாரம் பூவில் உள்ள கேசைன்

Insulin என்ற ரசாயனம் சர்க் கரை நோயைக் கட்டுப்படுத் தும் இந்த ரசாயனம் புத்தம்

புதிய ஆவாரம் பூவில்தான் இருக்கும்.

    ஆவாரம் பூ மலச்சிக்கலைத் தீர்க்கும். சிறுநீரகச் செயல் பாட்டை மேம்படுத்தும்.

   ஆவாரம் பூவைத் தேநீரில் போட்டுக் குடித்து வந்தால் சருமம் பளிச்சிடும்.

    நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்புச் சத்து, ஆண்டி ஆக்ஸிடென்ட் நிறைவாக இருப்

பதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.

     பார்வைக் குறைபாடு, கைகால் நடுக்கம், வீக்கம், சிறு நீரகப் பிரச்சினை சரி செய்யும்.

     வெந்தயம்போல, நெல்லிக்காய், ஆவாரம்பூ, வல்லாரைக் கீரையும் கணையத்தை பலப்படுத் தக் கூடியவையே.

 

தலைவலித் தைலம்

முகத்தில் மொத்தம் எட்டு சைனஸ் அறைகள் உள்ளன. அதில் நெற்றிப்பகுதியில் இரண்டு சைனஸ் அறைகள் அமைந்துள்ளன. சைனஸ் அறை என்பது ஜன்னல்களைக் கொண்ட அறைபோல இருக்கும். ஏதேனும் பிரச்சினையால் சைனஸ் அறை மூடினால், அறைக்குள் சளி கோர்த்துக் கொள்ளும். இதனால் மூக்கு, கன்னம், தலை, நெற்றி ஆகிய இடங்களில் வலி ஏற்படும். அதற்கு நிவாரணம்தான் இந்த தலைவலித் தைலம்.

தேவையானவை: கொட்டை மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், ஓமம், சாம்பிராணி.

செய்முறை: இந்த நான்கையும் சம அளவில் எடுத்து, ஒரு நாள் வெயிலில் வைத்துக் காய வைத்துப் பொடியாக்கி காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.

தேவையான அளவு இந்தப் பொடியை எடுத்து தண்ணீரில் குழைத்து முகத்தில் எந்த இடத்தில் சைனஸ் வலி இருக்கிறதோ அங்கு தடவ வேண்டும். இரவு நேரத்தில் தடவி, காலையில் தூங்கி எழுந்தவுடன் கழுவிக் கொள்ளலாம். தொடர்ந்து சைனஸ் வலி இருப்பவர்கள், தண்ணீருக்குப் பதிலாக இஞ்சிச் சாறுடன் இந்தப் பொடியைத் தடவி வலி இருக்கும் இடத்தில் பூசலாம்.

பலன்கள்:

ஆன்டி வைரஸாகச் செயல்படும்.

  அதிகமான தும்மல், காலைத் தும்மல், முகவீக்கம், சைனஸ் தலைவலி எல்லாம் நீங்கி விடும்.

   தலைக்குக் குளித்த பிறகு சிலருக்குத் தலைவலி வரும். கூந்தலை உலர்த்திய பிறகு, இந்தத் தைலத்தை ஒரு சிட்டிகை எடுத்து உச்சந்தலையில் ஒரு பொட்டுப்போல வைக்கலாம். இதனால் தலைவலி வராது.

  அனைத்துவித தலைவலிகளையும் போக்கக் கூடிய அற்புத மருந்து.

 

Comment