தமிழகத் திருச்சபைச் செய்திகள்
கோணாங்குப்பம் பெரிய நாயகிமாதா திருவிழா
- Author Fr.Gnani Raj Lazar --
- Sunday, 03 Feb, 2019
கோணாங்குப்பம் பெரிய நாயகிமாதா திருவிழா
விருத்தாசலம் அருகே கோணாங்குப்பம் கிராமத்தில் பிரசித்திபெற்ற பெரிய நாயகி மாதா திருத் தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தேர் திருவிழா சிறப்
பாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த ஜனவரி 14 ஆம் தேதி கொடி யேற்றத்துடன் விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினம் கூட்டுத்திருப்பலி, சிறப்பு பிரார்த்தனைகள் நடந்து வந்தது. பத்தாம் நாள் திரு விழாவாகத் தேர் திருவிழா நடந்தது.
முகாசபரூர் பாளையகாரர் பால தண்டாயுதம் அவரது வீட்டிலிருந்து தேவாலய மரியாதையுடன் குதிரைமீது அமர்ந்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு, தேரை அவர் துவக்கி வைக்க பல்லாயிரக்கணக்கான மக்கள்வெள்ளத்தில் மின் விளக்கு அலங் காரத்துடன் தேர் பவனி வந்தது பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது.
குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த திருவிழாவில் விருத்தாசலம் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மட்டுமில்லாமல் தமிழகத்தின் சென்னை, திருச்சி, வேளாங்கண்ணி, நாகர் கோவில் மற்றும் திருவனந்தபுரம், பெங்களூர் உட்பட வெளிமாநிலங் களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோணாங்குப்பம் கிராமத்துக்கு சென்னை, விழுப்புரம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
Comment