
திருத்தந்தையின் முழக்கம்
(நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்)
“அழகான மற்றும் அனைவரும் வாழக்கூடிய உலகத்தைப் பெறுவதற்கு இளம் தலைமுறையினருக்கு உரிமை உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கடவுளின் தாராளமான கரங்களிலிருந்து நாம் பெற்ற படைப்பினை பாதுகாப்பதற்கான கடமைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.”
- ஆகஸ்டு 21, ஐரோப்பிய நாடுகளுக்கான செய்தி
“ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் அருள்பணியாளரிடம் மக்கள் தங்கள் உள்ளத்தின் இரகசியங்களை எடுத்துரைப்பதுபோல, வழக்கறிஞர்களிடம் மக்கள் தங்கள் உள்ளத்தின் உண்மையைச் சொல்கிறார்கள். இதனை நன்கு உணர்ந்து, பிரச்சினைகளிலிருந்து வெளிவர மக்களுக்கு முழு மனத்துடன் உதவ வேண்டும்.”
- ஆகஸ்டு 21, ஐரோப்பிய வழக்கறிஞர் குழு
“நாம் இயேசுவிடம் மிகவும் வருந்திச் செபிக்கும்போது நமது விண்ணப்பத்தை அவரால் மறுக்க முடியாது. கிறிஸ்துவுடனான நமது தனிப்பட்ட உறவை நாம் வளர்த்துக்கொள்வதன் வழியாக, நம்பிக்கையில் உறுதியானவர்களாக நாம் மாற முடியும்.”
- ஆகஸ்டு 20, ஞாயிறு மூவேளைச் செப உரை
“கானானியப் பெண்ணின் நம்பிக்கை, இறையியல் துணிச்சல் நிறைந்ததல்ல; மாறாக, வலியுறுத்தல் நிறைந்தது. அவரின் நம்பிக்கையின் பலமே, இயேசுவினுடைய மனநிலையை மாற்றியது. அவரது விருப்பத்தை, விண்ணப்பத்தை வார்த்தைகளால் அல்ல; மாறாக, நம்பிக்கையால் பெற்றுக்கொண்டார்.”
- ஆகஸ்டு 20, ஞாயிறு மறையுரை
“வெறுப்பு மற்றும் வன்முறையை மனித இதயங்களில் இருந்து ஒழிக்க உதவுவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு. ஆயுத ஒழிப்பை ஊக்குவிப்பதன் வழியாக இராணுவச் செலவீனங்களைக் குறைத்து, அதிகமான மனிதாபிமானத் தேவைகள் வழங்கப்படுவதற்கும், மரணத்தின் கருவிகளை வாழ்க்கையின் கருவிகளாக மாற்றுவதற்கும் நாம் உதவ வேண்டும்.”
- ஆகஸ்டு 19, உலக மனிதாபிமான தினச் செய்தி
“மற்றவரை ஒரு தடையாகப் பார்க்காமல், அன்புக்குரிய ஒரு சகோதர- சகோதரியாகப் பார்த்து, பகைவர்கள் இல்லா உலகை உருவாக்குவோம்.”
- ஆகஸ்டு 18, ‘டுவிட்டர்’ குறுஞ்செய்தி
Comment