No icon

திருத்தந்தையின் முழக்கம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:

 “நாம் பிறரைக் குறித்து குறைகூறுவதை விடுத்து, அதிக நேரத்தை இறைவேண்டலில் செலவிடுவோம். ஒருவர் மற்றவருக்காகச் செபிக்கும் அருளை இறைவனிடம் வேண்டுவோம்.”

- ஆகஸ்டு 02, ‘எக்ஸ்தளப் பதிவுச் செய்தி.

குடும்பம், பள்ளி, பணிச்சூழல், ஓய்வுநேரம் என எல்லா இடங்களிலும் இயேசுவைப் பற்றி துணிவுடன் எடுத்துரைக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும் என்றும், நற்செய்தியை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்பவர்களாக இளைஞர்கள் இருக்க வேண்டும்.”

- ஆகஸ்டு 03, 35 -வது இளையோர் விழாவில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு அனுப்பியுள்ள செய்தி.

குருக்களின் பாதுகாவலராக விளங்கும் புனித ஜான் மரிய வியான்னியைப் போல கடினமான சூழலிலும் மிகுந்த ஆர்வம், பெருந்தன்மை, கடவுளுக்காகவும் மக்களுக்காகவும் தங்களையே அர்ப்பணித்துப் பணியாற்றும் உள்ளம் கொண்டவர்களாகக் குருக்கள் இருக்க வேண்டும்.”

- ஆகஸ்டு 04, ஞாயிறு மூவேளைச் செப உரை.

புத்தக வாசிப்பினால், ஒருவன் எழுத்தாளனிடமிருந்து பெறும் செழுமையினால் தன்னை வளப்படுத்திக்கொள்கிறான். வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் சுறுசுறுப்பானவர்களாக விளங்குகிறார்கள்.”

- ஆகஸ்டு 04, புகுநிலை அருள்பணித்துவ மாணவர்களுக்கும், மேய்ப்புப் பணியாளர்களுக்கும் அனுப்பிய கடிதம்.

இயேசுவுக்குச் செவிமடுத்தல் என்பது, நற்செய்தி நூலைக் கையில் எடுத்து, அதனை வாசித்து, அங்கு இயேசு நம் இதயங்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என்பதற்குச் செவிமடுப்பதாகும், ஏனெனில், அவரே முடிவற்ற வாழ்வைத் தரும் வார்த்தைகளைக் கொண்டுள்ளார்.”

- ஆகஸ்டு 06, இயேசுவின் உருமாற்றத் திருவிழாவை முன்னிட்டு எக்ஸ்தளப் பதிவு.

Comment