No icon

அருள்பணி ஜார்ஜ் பிளாத்தோட்டம்

கண்டங்களளவில் நடைபெற உள்ள ஆசிய ஆயர் பேரவை

ஒருங்கிணைந்த பயணம் குறித்த ஆயர் பேரவையானது  கண்டங்களளவில் ஏழு இடங்களில் நடக்க உள்ளதாகவும், ஆசியாவிற்கான செயல்திட்டங்கள் FABC  என்னும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பால் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அருள்பணி ஜார்ஜ் பிளாத்தோட்டம் தெரிவித்துள்ளார். சனவரி 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை FABC என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் கூடுதல் செயலரும் சலேசிய சபை அருள்பணியாளருமான  ஜார்ஜ் பிளாத்தோட்டம் அவர்கள், உங்கள் கூடாரத்தின் எல்லைகளைப் பெரிதாக்குதல், என்ற தலைப்பில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆசிய ஆயர் பேரவைக் கூட்டத்தின் முயற்சி இது என்றும் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 24 ஆம் தேதி வெள்ளி முதல் 27 ஆம் தேதி திங்கள் வரை ஆசிய ஆயர் பேரவையானது ஆசியா கண்டத்தின் சார்பாக தாய்லாந்தின் பாங்காங்கில் உள்ள பான் பு வான் மேய்ப்புப்பணி பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது என்று தெரிவித்த அருள்பணி ஜார்ஜ் பிளாத்தோட்டம் அவர்கள், ஐரோப்பாவிற்கு ப்ராக்கிலும் (Prague), இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பொகொட்டாவிலும் (Bogota), ஆஸ்திரேலியா, ஓசியானியாவிற்கு     சுவாவிலும்(Suva), வட அமெரிக்காவிற்கு ஒர்லாந்தாவிலும் (Orlando), மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெய்ரூட்டிலும்(Beirut) நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

"உங்கள் கூடாரத்தின் எல்லைகளைப் பெரிதாக்குதல்என்ற தலைப்பில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆசிய ஆயர் பேரவையின் தாக்கத்தால் அதன் செயலகத்தால் வெளியிடப்பட்ட 50 பக்க ஆவணத்தை ஒட்டியதாக, கண்டங்கள் அளவிலான இச்செயல்முறை அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட அருள்பணி ஜார்ஜ் பிளாத்தோட்டம் , ஏழு இடங்களில் நடைபெற இருக்கின்ற கூட்டங்கள் மார்ச் மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இக்கூட்டங்களால் வரைவு செய்யப்படும் ஆவணங்கள் 2023 அக்டோபர் மாதத்தில் உரோமையில் நடைபெற இருக்கும் அனைத்துலக ஆயர் பேரவைக்கான செயல்பாட்டின் அடிப்படையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ள அருள்பணி ஜார்ஜ் பிளாத்தோட்டம், இளையோர், பொதுமக்கள், ஆண்கள், பெண்கள், மதம், அருள்பணியாளர்கள், ஆயர் நிலையின் அனைத்து பிரிவினர் ஆகியோருக்கு போதுமான முன்னுரிமை அங்கீகாரம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான விரிவான திட்டங்களை உருவாக்க உள்ளது என்றும் கூறியுள்ளார்.

சில கூட்டங்களுக்கு ஆசியாவின் மற்ற கிறிஸ்தவ சபைகளில் இருந்து உடன் சகோதரர்களை அழைக்கும் திட்டம் உள்ளது என்றும், அதிக பங்கேற்பாளர்களை ஈடுபடுத்த இணைய வழி அமர்வுகளும் இருக்கும் என்றும் அருள்பணி ஜார்ஜ் பிளாத்தோட்டம் எடுத்துரைத்துள்ளார்.

Comment