பாகிஸ்தானில் நீதிக்காகக் காத்திருக்கும் கிறிஸ்தவர்கள்!
பாகிஸ்தானில் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ஆம் தேதி ஜார்ன்வாலா என்ற இடத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை இரு கிறிஸ்தவர்கள் அவமதித்தார்கள் எனக் குற்றம்சாட்டி, அங்கிருந்த கிறிஸ்தவக் குடியிருப்புகள்மீது முஸ்லிம் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 26 கிறிஸ்தவத் தேவாலயங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. எண்ணற்றக் கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து அங்கிருந்து வெளியேறினர். இத்தாக்குதல் நடந்து 8 மாதங்கள் கடந்த பின்னரும், பாதிக்கப்பட்டு நீதிக்காகக் காத்திருக்கும் கிறிஸ்தவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று இங்கிலாந்து பாராளுமன்றக் குழு கூட்டத்தில் ‘Aid to the Church in Need’ (ACN) எனும் கத்தோலிக்க உதவி அமைப்பு புகார் மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. இக்கூட்டத்தில் உரையாற்றிய ACN அமைப்பினர், பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலைகள் குறித்து ஆராயும் நோக்கில், அந்நாட்டில் தேசிய அவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் அரசை இங்கிலாந்து அரசு வலியுறுத்த வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.
Comment