No icon

ஆயர் பேரவையின் மூன்றாம் கட்டக் கூட்டம்

கண்டங்கள் அளவிலான உலக மாமன்றக் கூட்டம் ஆரம்பம்

செக் நாட்டின் தலைநகரான ப்ரேகு வில் கூட்டியக்கப் பயணச் செயல்பாடுகளுக்கான ஆயர் பேரவையின் மூன்றாம் கட்டக் கூட்டம் பிப்ரவரி 5 முதல் 12 வரை நடைபெற்று வரும் வேளையில் ஐரோப்பா முழுவதிலும் இருந்து இருநூறு பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பிப்ரவரி 5 முதல் 10 வரை நடைபெற்ற முதல் பகுதியில், ஏறக்குறைய 200 பிரதிநிதிகள் அதாவது, 39 ஐரோப்பிய ஆயர் பேரவையைச் சார்ந்த 156 பேர், CCEE  ஆல் தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்ட 44 பேர் ஆகியோர் ஒன்றுகூடி ஆயர் மாமன்றத்தின் சவால்கள் மற்றும் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.

பிப்ரவரி 11 முதல் 12 வரை நடைபெறும் இரண்டாவது பகுதியில், 39 தலைவர்கள் ஒன்றுகூடி விவாதங்களின் முடிவுகளை மதிப்பிட்டு, மார்ச் மாதத்திற்குள் ஆயர் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்படும் தொகுப்பிற்கான வேலையையும் தொடங்கினர்.

பிப்ரவரி 24 வெள்ளி முதல் 27 திங்கள் வரை ஆசிய ஆயர் பேரவையானது ஆசிய கண்டத்தின் சார்பாகத் தாய்லாந்தின் பாங்காங்கில் உள்ள மேய்ப்புப்பணி பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியா, ஓசியானியாவிற்கு சுவாவிலும் (Suva), ஆப்பிரிக்காவிற்கு மார்ச் மாதம் 1 முதல் 6 வரை அடிஸ் அபாபாவிலும்  இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு மார்ச் 17 முதல் 23 பொகொட்டாவிலும் வட அமெரிக்காவிற்கு பிப்ரவரி 13 முதல் 17 ஒர்லாண்டோவிலும் (Orlando), மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிப்ரவரி 12 முதல் 18 பெய்ரூட்டிலும் (Beirut) நடைபெற உள்ளது.

Comment