No icon

ஜூலை  21

புனித பிரின்டிசி லாரன்ஸ்

புனித பிரின்டிசி லாரன்ஸ் நேப்பிள்ஸில் 1559, ஜூலை 22 ஆம் நாள் பிறந்தார். மொழித்துறையில் முதல் மாணவரானார். 16 ஆம் வயதில் வெரோனாவில் கப்புச்சின் சபையில் சேர்ந்தார். மெய்யியல், இறையியல் பயின்று 1596 இல் குருவானார். பல்வேறு இடங்களில் விவிலியம், இறையியலை ஞானத்துடன் மறையுரை நிகழ்த்தினார். தனது சொல்லாலும், செயலாலும், திறமையாலும் நற்செய்தி அறிவித்தார். திருத்தந்தை 8 ஆம் கிளமெண்ட் அழைப்பு பெற்று, யூத மக்களிடையே கிறிஸ்தவ மறை உண்மைகளை அறிவித்து, எண்ணற்ற யூதர்களை மனம் மாற்றினார். 1601 இல் உரோமை பேரரசர் 2 ஆம் ருடால்ஃப் அரசவையில் குருவாக செயல்பட்டார். திருச்சிலுவையின் வல்லமையால் எதிரிகளை வென்றார். 1602 ஆம் ஆண்டில் அச்சபையின் அகில உலக தலைவரானர். திருத்தந்தையின் தூதுவராக பவாரியர் அரசவையில் பணியாற்றினார். இறைமாட்சிக்காக பணி செய்த லாரன்ஸ் 1619 ஆம் ஆண்டு, ஜூலை 22 ஆம் தேதி இறந்தார்.

Comment