No icon

ஜனவரி - 15  

புனித வனத்துப் பவுல்

புனித வனத்துப் பவுல் எகிப்து நாட்டில் 229 இல் பிறந்தார். அன்பிலும், அறிவிலும், பக்தியிலும் சிறந்து விளங்கினார். 15 ஆம் வயதில் பெற்றோரை இழந்தபோது, இறைவனிடம் தஞ்சம் புகுந்தார். அன்றாட வாழ்வின் போராட்டங்களை இறைவனுக்கு அர்ப்பணித்தார். தீசியுஸ் அரசன் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வாளுக்கு இறையாக்கியபோது, அரசனிடமிருந்து தப்பி, பாலைவனம் சென்றார். பாலைவனத்தில் 90 ஆண்டுகள் தவம் செய்தார். வனத்தில் விலங்குகளை அன்பு செய்தார். பழங்களை உணவாக அருந்தினார். காகம் தினமும் ரொட்டி கொண்டு வந்து கொடுக்கும். இவரே முதலில் பாலைவனத்தில் தவம் செய்தவர். செபத்திலும், தவத்திலும் வளர்ந்து, இறைபிரசன்னத்தில் வாழ்ந்தார். இறைதூண்டுதலால் இவர் வனத்து அந்தோனியாரைச் சந்தித்தார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்த பவுல், 113 ஆம் வயதில் இறந்தபோது, இவரின் உடலை அந்தோனியார் சிங்கத்தின் உதவியுடன் கல்லறையில் அடக்கம் செய்தார்.

Comment