No icon

பிப்ரவரி - 19 

புனித கான்ராட்

புனித கான்ராட் வட இத்தாலியில் 1290 ஆம் ஆண்டு பிறந்தார். நற்பண்பும், பக்தியும், பாசமும் மிகுந்தவராக வளர்ந்தார். ஆன்மீக காரியங்களிலும், வேட்டையாடுவதிலும் ஆர்வமுடையவர். ஒருமுறை விலங்கு ஒன்று இவரது குறிக்குத் தப்பி, புதரில் மறைந்தது. புதருக்கு தீ மூட்டியபோது, அது கொடுந்தீயாய் மாறி, காடு முழுவதும் தீக்கிரையானது. இந்நிகழ்வினால் அரசன் இவருக்கு மரண தண்டனை விதித்தான். கான்ராட் தனது தவறுகளுக்கு மனம்வருந்தி, மன்னிப்பு கேட்டார். தனது சொத்துகளை விற்று கொடுப்பதாகக் கூறினார். அவ்வாறு செய்த பின், புனித பிரான்சிசின் மூன்றாம் சபையில் சேர்ந்து, துறவியாக 30 ஆண்டுகள் செபத்திலும், தவத்திலும், தூயவராக வாழ்ந்து, புதுமைகள் செய்தார். இறையருளால் நோயாளிகளைக் குணப்படுத்தினார். இறையமைதியின் நிறைவில் வாழ்ந்த இறையன்பின் மாமனிதர், கான்ராட் 1351 ஆம் ஆண்டு, பிப்ரவரி 19 ஆம் நாள் இறந்தார்.

Comment