No icon

ஆகஸ்ட் 07    

புனித கயத்தான்

புனித கயத்தான் 1480ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். பெற்றோர் இவரை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து செபித்தனர். அன்னை மரியாவின் அருள் பெற்று நற்பண்பில் வளர்ந்தார். தனது 24 ஆம் வயதில் உள்நாட்டு மற்றும் திரு அவை சார்ந்த சட்ட நூலைப் பயின்று, இறைஞானத்தில் வளர்ந்தார். குருவாக அருள்பொழிவு பெற்று, திருத்தந்தை 2 ஆம்  ஜூலியஸ் என்பவருக்கு உதவினார். இறைபணியை திறம்பட செய்தார். பக்தி, சேவை, இரக்க செயல்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். மருத்துவமனை  கட்டி, நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் செய்தார். மக்களிடம் அன்பையும், இறையாசீரையும் பகிர்ந்தார். ஏழ்மையில் பிச்சை எடுத்து வாழ்ந்தார். 1524 ஆம் ஆண்டு புதிய துறவு சபை தொடங்கினார். அனைவருக்கும் முன்மாதிரியாகவும், தூயவராகவும் கடமைகளை சரிவர செய்து, ஒழுக்க நெறியில் வாழ்ந்த கயத்தான் 1547 ஆம் ஆண்டுஆகஸ்ட் 7 ஆம் நாள் இறந்தார்.

Comment