ஆகஸ்ட் 10
புனித லாரன்ஸ்
- Author Sr. மேரி ஆனந்த் DM --
- Wednesday, 10 Aug, 2022
புனித லாரன்ஸ் உரோமைத் திருத்தொண்டர்களுள் ஒருவர். இரண்டாம் திருத்தந்தை சிக்ஸ்துஸ் இவரது நண்பர். தனது மறையுரையால் பலரை கிறிஸ்தவராக்கினார். லாரன்ஸ் கிறிஸ்துவை அறிவித்ததால், வலேரியன் அரசன் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து, திரு அவையின் சொத்துக்களைத் தன்னிடம் ஒப்படைக்கக் கூறினான். லாரன்ஸ் நடக்க இயலாதவர்கள், பார்வையற்றவர்கள், முதியோர்கள், ஆதரவற்றோர்கள், ஏழைகள் ஆகியோரை அரசன் முன் நிறுத்தி, “இவர்களே திரு அவையின் சொத்துக்கள்” என்றார். அரசன் கோபங்கொண்டு, அவரை இரும்பு கட்டிலில் படுக்கவைத்து, தீ மூட்டினான். லாரன்ஸ் அரசனிடம், “கொடுங்கோலா! என் உடலின் இந்தப்பாகம் நன்றாக வெந்துவிட்டது. திருப்பிப்போடு, நன்றாக வெந்ததும் எடுத்து சாப்பிடு” என்றார். கிறிஸ்துவை அரசராக அறிவித்த லாரன்ஸ், ஆகஸ்ட் 10 ஆம் நாள் மறைசாட்சியாக இறந்தார்.
Comment