ஆகஸ்ட் 11
புனித கிளாரா
- Author Sr. மேரி ஆனந்த் DM --
- Wednesday, 10 Aug, 2022
புனித கிளாரா இத்தாலியில் 1194 ஆம் ஆண்டு, ஜூலை 16 ஆம் நாள் பிறந்தார். இறைவன்மீது அன்பு கொண்டு வாழ்ந்தார். குடும்பச் செபங்களில் ஆர்வமுடன் பங்கேற்றார். பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தபோது, புனித பிரான்சிஸ் அசிசி இயேசுவைப் பற்றி, மறையுரை நிகழ்த்தினார். அதைக் கேட்ட கிளாரா இயேசுவுக்கு தனது க+ன்னிமையை அர்ப்பணித்தார். உலக இன்பங்களை துறந்து, புனித அசிசியார் வழிகாட்டுதலில் ஆசீர்வாதப்பர் துறவு மடத்தில் சேர்ந்தார். ஏழ்மையின் வழியில் கிறிஸ்துவை பிரதிபலித்தார். ஒறுத்தல்கள் வழி பாவங்களுக்கு பரிகாரம் செய்தார். இறைவார்த்தையை கடைபிடித்து, இயேசுவின் பாடுகளில் ஒன்றிணைந்தார். நீண்ட நேரம் நற்கருணை ஆண்டவரை ஆராதித்தார். நோய்வாய்பட்ட நாட்களில் நற்கருணை அவரது உணவானது. தனக்கென்று வாழாமல் பிறர்கென்று வாழ்ந்த கிளாரா, 1253 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 11 ஆம் நாள் இறந்தார்.
Comment