ஆகஸ்ட் 14
புனித மாக்சிமிலியான் கோல்பே
- Author Sr. மேரி ஆனந்த் DM --
- Friday, 12 Aug, 2022
புனித மாக்சிமிலியான் கோல்பே போலந்தில் 1894 ஆம் ஆண்டு, ஜனவரி 8 ஆம் நாள் பிறந்தார். இறைபக்தி, அன்பு, பாசம் மிகுந்த சூழலில் வளர்ந்தார். 16 ஆம் வயதில் பிரான்சிஸ்கன் துறவு சபையில் சேர்ந்து கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் போன்ற துறவு வார்த்தைப்பாடுகள் வழி இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து குருவானார். இறையன்பையும், இறை இரக்கத்தையும் பறைசாற்றினார். அன்னை மரியாவின்மீது கொண்ட பாசத்தால் ‘அமல அன்னையின் சேனை’ என்ற அமைப்பை உருவாக்கினார். ஜப்பானில் அச்சகம் தொடங்கி, தனது தூய சிந்தனையாலும், உழைப்பாலும் நற்செய்தியை அறிவித்தார். ஹிட்லரின் கொடூரச் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்ததால் கைதியாக, சிறையில் அடைக்கப்பட்டார். தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை என்று மொழிந்த இயேசுவின் வார்த்தையை செயல்படுத்தி 1941 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14 ஆம் நாள் இறந்தார்.
Comment