No icon

ஆகஸ்ட் 13                   

புனிதர்கள் இப்போலித்துஸ்  மற்றும் போன்சியான்

             புனித இப்போலித்துஸ் உரோமையில் வாழ்ந்தார். சட்டங்களை நுணுக்கமாக கற்று அறிவில் ஞானத்திலும் சிறந்து விளங்கினார். ஞானம் மிகுந்த சொற்களால் தனது அறிவை வெளிப்படுத்தினார். இவரது காலத்தில் மும்மைப் பிரதிபலிப்பு, கீழ்நிலைக்கோட்பாடு போன்ற தப்பறைகள் தலைத்தூக்கிய போது அவற்றிற்கு எதிராக குரல் கெடுத்தார்.   போன்சியான் 230ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் நாள் திருத்தந்தையானார். இவரது ஆட்சியின் போது பேரரசர் மாக்சிமின் மறைக்கலகத்தை ஆரம்பித்தார். ஆயர்கள், குருக்கள், கிறிஸ்துவை பின்பற்றிய மக்களையும் துன்புறுத்தி கொலை செய்தான். திருத்தந்தை போன்சியான், இப்போலித்துஸ் இருவரையும் சர்தானியாவுக்கு நாடுகடத்தி துன்புறுத்தினர். கிறிஸ்துவை பின்பற்றி ஆதாயம் எதிர்பாராமல் இறைபணி செய்து துன்பத்திலும் அமைதியில் வாழ்ந்த இப்போலித்துஸ் மற்றும் போன்சியான் இருவரையும் 236ஆம் ஆண்டு கொலை செய்தனர்.

Comment