No icon

ஆகஸ்ட் 16 

புனித ஹங்கேரி ஸ்டீபன்

புனித ஸ்டீபன் 975 ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டில் பிறந்தார். இவரது தந்தை மேயராகப் பணி செய்தார். 10 ஆம் வயதில் தந்தையுடன் இணைந்து, திருமுழுக்கு பெற்றார். பெற்றோரின் வழிகாட்டுதலால் இறையன்பிலும், பிறரன்பிலும், கிறிஸ்தவ நெறியிலும் வளர்ந்தார். 20 ஆம் வயதில் ஜிசேலா என்ற பெண்ணை திருமணம் செய்தார். தந்தையின் இறப்புக்குப் பின் மேயரானார். தனது ஆட்சிக்கு உட்பட்டவர்கள் கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொள்ளவும், நாட்டில் கிறிஸ்தவம் வளர்ந்திடவும் உழைத்தார். திருத்தந்தையின் அனுமதியுடன் ஆலயங்கள் கட்டி பாதுகாத்தார். 1001 ஆம் ஆண்டு, ஹங்கேரி நாட்டின் அரசரானார். எருசலேமில் துறவு இல்லம் நிறுவினார். திரு அவைக்கு எதிராக நிலவிய குற்றச்சாட்டுகளை அகற்றினார். ஏழைகளின் தேவையை நிறைவேற்றினார். நற்கருணை மீதும், அன்னை மரியாவின் மீதும் பக்தி கொண்ட ஸ்டீபன், 1038 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள் இறந்தார்.

Comment