No icon

ஆகஸ்ட் 20

புனித பெர்னார்ட் தே கிளேர்வா

புனித பெர்னார்ட் தே கிளேர்வா பிரான்ஸில் 1090ஆம் ஆண்டு பிறந்தார். இலக்கியங்கள்மீது தீரா காதல் கொண்டிருந்தார். அன்னை மரியாவின் துணையுடன் இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்தார். 1112ஆம் ஆண்டு தம்முடன் 30 இளைஞர்களை அழைத்து சென்று சிஸ்டர்சியன் துறவு இல்லத்தில் சேர்ந்தார். ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி அடைந்து 12 துறவிகளுக்கு தலைவரானார். இறையன்பும், தூய்மையும், அமைதியும் கலந்த பணிவாழ்வு வெளிக்கொணர்ந்தார். 37ஆண்டுகள் துறவு இல்லத்தின் தலைவராக இருந்தார். 163 துறவு இல்லங்கள் நிறுவினார். அமைதியின் தூதராக இறைபணி செய்து பிரச்சனைகளை எளிதில் தீர்த்தார். சமுதாய, இறையியல் குழுக்களுக்கும், விவாத மன்றங்களுக்கும் நடுவரானார். பதவிகளை விரும்பாமல் அயலானின் வளர்ச்சியில் மகிழ்ந்தார். திருத்தந்தையாக 3ஆம் யூஜின் என்ற பெருடன் இறைபணி செய்து 1153, ஆகஸ்ட் 21ஆம் நாள் இறந்தார். 

Comment