No icon

செப்டம்பர் 8

தூய கன்னி மரியாவின் பிறப்புப் பெருவிழா

தூய கன்னி மரியா பாலஸ்தீனாவில் தாவீது வழிமரபில், சென்மப்பாவத்திற்கு உட்படாமல் ‘அமல உற்பவியாகப்’ பிறந்தார். ஆலயத்தில் வேதாகமம் பயின்றும், திருவுடைகள் தயாரித்தும், இறைவழிபாட்டில் பங்கேற்றார். புனித இஞ்ஞாசியார், “மரியாவின் கன்னிமை, அவருடைய தாய்மை, இயேசுவின் பிறப்பு ஆகிய மூன்று மறைபொருள்களும் இவ்வுலக அறிவு கண்களின் புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்டது” என்றார். புனித அகுஸ்தினார், “மரியா இயேசுவை ஈன்றெடுப்பதற்கு முன்னும்; ஈன்றெடுத்தப் போதும்; ஈன்றெடுத்தப் பின்னும் கன்னியாகவே இருந்தார்.” மரியா என்றும் கன்னி என்பது நமது கத்தோலிக்க விசுவாசமாகும். மரியா கன்னிமையில் இயேசுவை ஈன்றெடுத்தார். “வியப்படையுங்கள்; ஏனெனில், ஒரு கன்னி கருவுற்றிருக்கிறார். மேலும், வியப்படையுங்கள். ஏனெனில், கன்னி ஒரு குழந்தையை ஈன்றுள்ளார். குழந்தை ஈன்ற பின்னும் கன்னியாகவே இருக்கின்றார். என்னே வியப்பு! என்னே புதுமை! புதுமையிலும் புதுமை” என்கிறார். ஆகையால் உலகமே அவரது பிறப்புப் பெருவிழாவை கொண்டாடுகிறது.

Comment