No icon

செப்டம்பர்  12 

புனித குய்டோ

புனித குய்டோ பெல்ஜியம் நாட்டில் 950 ஆம் ஆண்டு பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் வாழ்ந்தாலும், இறைபற்றும், இறையன்பும், இறைஞானமும், நற்பண்புகளும் உள்ளவராக திகழ்ந்தார். விவசாயத் தொழில் செய்தார். ஆலய பணிகளையும், ஏழைகளையும் அதிகம் நேசித்தார். பலிபீடம் அலங்கரிப்பதும் மற்றும்  அனைத்து ஆலய பணிகளையும் செய்ய பங்குத் தந்தையால் நியமனம் பெற்றார். நாளும் செபம் வழியாக இறையன்பை சுவைத்தார். அன்னை மரியாவிடம் அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். ஆலய பணியைத் துறந்து, வியாபாரி ஒருவருடன் இணைந்து தொழில் தொடங்கினார். மிக விரைவில் தொழிலில் தோல்வியைத் தழுவினார். பின், உரோமைக்கு திருப் பயணம் மேற்கொண்டு, புனித பூமியை தரிசித்து, இறைவனின் அருள் செல்வம் நிறைவாகப் பெற்று, இறை பிரசன்னத்தில் வாழ்ந்தார். திருப்பயணிகளுக்கு உதவியாக இறைபணி செய்த குய்டோ 1012 ஆம் ஆண்டு இறந்தார்.

Comment