No icon

செப்டம்பர் 22  

புனித தாமஸ் வில்லனோவா

புனித தாமஸ் வில்லனோவா ஸ்பெயின் நாட்டில் 1488 இல் பிறந்தார். ஏழ்மையாக வாழ்ந்து, வருமானத்தின் பெரும் பகுதியை ஏழைகளுக்கு கொடுத்தார். நல்ல நூல்களை வாசித்து, ஆன்மீகத்தில் வளர்ந்தார். உயர்கல்வி கற்று பேராசிரியரானார். 1516 ஆம் ஆண்டு, புனித அகுஸ்தினார் துறவு மடத்தில் சேர்ந்தார். நற்செயல்கள் வழி அனைவரின் நன்மதிப்பை பெற்று, 1518 ஆம் ஆண்டு குருவானார். பேரரசர் 5 ஆம் சார்லஸ் அரசவையில் ஆலோசகராகவும், நிர்வாக குழுவின் உறுப்பினரானார். 1545 ஆம் ஆண்டு, வலென்சியா மறைமாவட்ட பேராயரானார். ஏழைகளுக்கு கல்லூரி நிறுவி கிறிஸ்தவ விசுவாசத்தை எடுத்துரைத்தார். மருத்துவமனைகள் நிறுவி, நோயாளிகளை குணமாக்கினார். தொழிலாளர்கள் திருப்பலியில் பங்கேற்று, வேலைக்கு செல்ல அதிகாலையில் திருப்பலி வைத்தார். நாளும் 500 மேல் ஏழைகளுக்கு உணவளித்தார். மரியாவின் அருகில் அமர்ந்து செபித்து 1555 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் இறந்தார்.

Comment