அக்டோபர் - 18
அல்காந்த்ரா நகர் புனித பேதுரு
- Author Sr. மேரி ஆனந்த் DM --
- Tuesday, 18 Oct, 2022
அல்காந்த்ரா நகர் புனித பேதுரு ஸ்பெயின் நாட்டில் 1499 ஆம் ஆண்டு பிறந்தார். இலக்கணம், மெய்யியல் கற்றுத்தேர்ந்தார். 1515 ஆம் ஆண்டு, பிரான்சிஸ்கன் துறவு மடத்தில் சேர்ந்து துறவியானார். கடுந்தவம், ஒறுத்தல், மேற்கொண்டார். இறைவார்த்தை, இறைபிரசன்னம் வழியாக இறையன்பை சுவைத்தார். மனிதாபிமானம், கனிவு, பொறுமை ஆகியவற்றை வாழ்வின் அடித்தளமாக கொண்டு நற்செயல்கள் செய்தார். இடைவிடாமல் இறைபிரசன்னத்தில் நிலைத்திருந்து, 1524 ஆம் ஆண்டு, குருவாக அருள்பொழிவு பெற்று, அனைத்து மக்களுக்கும் நற்செய்தி அறிவித்தார். அராபிடா மலையில் தங்கி, தனிமையில் கடுந்தவம் மேற்கொண்டார். நாளொன்றுக்கு ஒன்றரை மணிநேரம் உறங்கினார். செபம் செய்கின்றபோது, இறைபிரசன்னம், இறையன்பு உணர்ந்து, காற்றில் அப்படியே நிற்கும் வரம் பெற்றிருந்தார். மண்டியிட்டு செபம் செய்தவாறு 1562 ஆம் ஆண்டு, அக்டோபர் 18 ஆம் நாள் இறந்தார்.
Comment