No icon

அக்டோபர் 27

புனித ஃப்ருமென்சியஸ்

புனித ஃப்ருமென்சியஸ் டயர் பகுதியில் 4 ஆம் நூற்றாண்டில் பிறந்தார். சிறுவயதில் தனது மாமாவுடன் எத்தியோப்பியாவுக்கு கப்பலில் பயணம் செய்தபோது கொள்ளையர்கள் பயணிகளை வாளுக்கு இரையாக்கினர். ஃப்ருமென்சியஸ் கொலை செய்யாமல் அக்சும் அரசன் இஸானா என்பவரிடம் ஒப்படைத்தனர். ஃப்ருமென்சியஸ் தனது அன்பாலும், சேவையாலும் அரசரின் மனம்கவர்ந்து ஆலோசகரானார். அரண்மனையில் வாழ்ந்தாலும், ஆடம்பரம் இல்லாமல், ஏழ்மையில் எளியவராக வாழ்ந்தார். எத்தியோப்பியா சென்று கிறிஸ்துவை அறிவித்தார். “கீழ்ப்படிதல், ஒழுக்கமான வாழ்க்கை முறையால் கிறிஸ்துவை நெருங்கலாம்என்றார். ஃப்ருமென்சியஸ் ஆயராக அருள்பொழிவு பெற்றார். “அச்சமின்றி கிறிஸ்தவர்கள் என்று வெளிக்காட்டுங்கள். உங்கள் வாழ்க்கை முறையால் சான்று பகருங்கள்என்றுகூறி ஃப்ருமென்சியஸ் 384 ஆம் ஆண்டு இறந்தார்.

Comment