No icon

நவம்பர்  08  

புனித காட்ஃப்ரி

புனித காட்ஃப்ரி பிரான்ஸ் நாட்டில் 1066 ஆம் ஆண்டு பிறந்தார். 5 ஆம் வயதில், ஆசீர்வாதப்பர் துறவு மடம் சென்றார். அன்பிலும், ஞானத்திலும், ஒழுக்கத்திலும் வளர்ந்து ஏழைகளையும், நோயாளர்களையும் அன்புடன் கவனித்தார். துறவிகளின் வாழ்க்கைமுறைகளை தனதாக்கி; உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர் என்று வேறுபாடு இல்லாமல் அனைவரையும் உபசரித்தார். குருவாக அருள்பொழிவு பெற்று, துறவு மடத்தின் தலைவராக பொறுப்பேற்று, இறையன்பின் பணியாளராக பணி செய்தார். அன்னை மரியாவிடம் பற்றும், பக்தியும் கொண்டு செப, தவ வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தார். துறவு இல்லத்தின் ஒழுங்குகளை சீர்படுத்தினார். மறையுரை மூலம் இறைவனின் அன்பு, கருணை, இரக்கம் ஆகியவற்றை எடுத்துரைத்தார். இறையாட்சி பணி செய்து, ஆயராக அருள்பொழிவு பெற்றார். 1115 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 8 ஆம் நாள் இறந்தார்.

Comment