No icon

நவம்பர் 13

புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா

புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா போலந்து நாட்டில் 1550 ஆம் ஆண்டு, அக்டோபர் 28 ஆம் நாள் பிறந்தார். நன்மை செய்வதிலும், பகிர்ந்து வாழ்வதிலும், செபிப்பதிலும் சிறந்து விளங்கினார். இயேசுவை சொந்தமாக்க, அன்னை மரியாவின் துணை நாடினார். இறையன்பின் இனிமையை நாளும் சுவைத்தார். இயேசு சபை கல்லூரியில் சேர்ந்து, திருமறையை கற்று, திரு அவையின் எதிரிகளை அழிக்கத் துணிவு கொண்டார். கடின உழைப்பு, செபவாழ்வு, நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப தன் வாழ்வை மாற்றினார். இயேசு சபையில் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் வழி இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்தார். தூயவாழ்வு, சகோதர அன்பு, ஞானம் மிகுந்த பேச்சு, அன்பும், பொறுமையும், பாசமும், கனிவும் அடித்தளமாக கொண்டு, அனைவரின் மனம் கவர்ந்தார். இறைபணி வழி ஆன்மாக்களை மீட்ட ஸ்தனிஸ்லாஸ் நோயுற்று, 1568 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள் இறந்தார்.

Comment