No icon

நவம்பர் 18

புனித ரோஸ் பிலிப்பைன் துசேசன்

புனித ரோஸ் பிலிப்பைன் துசேசன் பிரான்ஸ் நாட்டில் 1769 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 29 ஆம் நாள் பிறந்தார். கிறிஸ்துவின்மீது தணியாத தாகம்கொண்டார். பிரெஞ்சு புரட்சியின்போது, சுரங்களில் மறைவாக வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு உதவினார். 1804 இல் துறவு, வார்த்தைப்பாடுகள் வழியாக இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்தார். காட்சி, தியானம் வழி இறையன்பை சுவைத்தார். ஏழை, எளிய மக்கள் மத்தியில் இறையன்பின் பணியாளராக கடந்து சென்றார். இடைவிடாமல் இறைபிரசன்னத்தில் வாழ்ந்து, நன்மைகள் செய்தார். குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தார். அனைவரின் தேவையை அறிந்து உதவினார். நற்கருணை முன் பலமணி நேரம் செபம் செய்தார். நிலைவாழ்வு தருகின்ற நலமளிக்கின்ற இறைவார்த்தையை வாழ்வாக்கி அறிவித்த ரோஸ், 1852 ஆம் ஆண்டு இறந்தார். திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 1988 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

Comment