No icon

புனித பூமிக்கான காணிக்கை!

ஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளியன்று புனித பூமியின் வளர்ச்சித் திட்டங்களுக்கென உலகின் ஒட்டுமொத்தக் கத்தோலிக்கத் திரு அவையின் ஆலயங்களில் சிறப்புக் காணிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு புனித வெள்ளி சிறப்புக் காணிக்கையானது, போரால் துயருறும் புனித பூமி மக்களுடன் நமது ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் இருக்கட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் எண்ணற்ற மக்கள் புனித பூமியில் தங்கள் சொந்த இடங்களை விட்டு விலகிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு உதவும் விதமாக வேலை வாய்ப்புகள், தங்குமிடங்கள், கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்க இந்தக் காணிக்கை வழியாக உலகக் கத்தோலிக்கர்கள் உதவ முடியும் எனவும் கர்தினால் கிளவ்தியோ தெரிவித்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் திரட்டப்படும் புனித வெள்ளி காணிக்கையில் 65 விழுக்காடு புனித பூமி திட்டங்களுக்கும், 35 விழுக்காடு மத்தியக் கிழக்குப் பகுதியின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் மற்றும் குருத்துவப் பயிற்சிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு புனித பூமிக்கான புனித வெள்ளி காணிக்கை 65 இலட்சத்து 71 ஆயிரத்து 893 யூரோக்கள் மற்றும் 96 சென்ட்கள் எனத் திருப்பீடத் துறை அறிவித்துள்ளது. இந்தப் புனித வெள்ளி காணிக்கையால் எருசலேம், பாலஸ்தீனம், இஸ்ரயேல், ஜோர்தான், சைப்ரஸ், சிரியா, லெபனான், எகிப்து, எத்தியோப்பியா, எரிட்ரியா, துருக்கி, ஈரான், ஈராக் ஆகிய நாடுகள் பயன் பெறுகின்றன.

Comment